உண்மையான வில்லனே நான்தான்! ரஜினி இல்ல.. கமல் சொன்ன படம் எது தெரியுமா?

by ROHINI |
kamalrajini
X
kamalrajini

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் நடிக்க வந்த புதிதில் தமிழ், இந்தி என கிட்டத்தட்ட 16 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அந்த வகையில் இருவருமே கடைசியாக சேர்ந்து நடித்த படம் அக்னி சாட்சி. 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து படங்களில் நடிக்கவே இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

ஆனால் அதன் பிறகு வந்த எத்தனையோ இயக்குனர்கள் மீண்டும் ரஜினியையும் கமலையும் வைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தனர். அது நடக்கவே இல்லை. கடைசியாக நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு நடிகர் சங்கத்திலிருந்து ஒரு நாடகம் நடத்தவும் அதில் மீண்டும் ரஜினியும் கமலும் நடிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

ஏன் இயக்குனர் லோகேஷ் கூட ஒரு சமயம் கமல் மற்றும் ரஜினியை வைத்து படத்தை எடுக்க முயற்சித்தேன். முக்கியமாக கமல் தயாரிப்பில் ரஜினி நாயகனாக நடிப்பது என கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் கொரோனாவால் திட்டம் கைவிடப்பட்டது. இவர்கள் இருவரையும் வயதான கேங்ஸ்டராக காட்டும் கதையாக அந்த படத்தை எடுக்க முயற்சித்தேன் அதன் பிறகு அப்படத்தை எடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்ததனால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அந்தப் படத்தை அப்படியே விட்டு விட்டேன் எனக் கூறி இருந்தார் லோகேஷ்.

இதைப்பற்றி கமலும் ரஜினியும் கூறும் போது கூட வாய்ப்பு வந்தால் நாங்கள் நடிப்போம் என்று தான் இருவருமே சொல்லி வைத்தார் போல பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கமல் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. அந்தப் படத்தின் புரமோஷனுக்காக பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் கமல்.

அப்போது ரஜினியை பற்றிய ஒரு கேள்விக்கு கமல் பதிலளித்திருக்கிறார். கமலிடம் ரஜினிகாந்த் நடித்த தளபதி, பாட்ஷா ,முள்ளும் மலரும் போன்ற படங்களில் எந்த படம் உங்களுக்கான ஃபேவரைட் திரைப்படம் என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல் என்னை பொறுத்த வரைக்கும் முள்ளும் மலரும் தான். ஏனெனில் நானும் ரஜினியும் முடிவெடுத்தது என்னவெனில் நீங்கள் முள்ளும் மலரும் திரைப்படம் மாதிரியே நடித்துவிட்டு போங்க. நான் பாட்ஷா மாதிரி போய் விடுகிறேன் என்று முடிவெடுத்தோம்.


எல்லா படங்களும் நாங்கள் பண்ணி பார்த்திருக்கிறோம். ஆனால் முள்ளும் மலரும் ரஜினியை தான் பிடிக்கும். அதை போல அபூர்வ ராகங்கள் ரஜினியையும் பிடிக்கும். அந்தப் படத்தைப் பொறுத்த வரைக்கும் அதில் நான் தான் வில்லன். அபூர்வ ராகங்கள் படத்தில் நான் தான் அந்த காதலுக்கு இடையூறாக இருக்கிற அரவேக்காட்டு காதலன் நான்தான் என கமல் கூறியிருக்கிறார்.

Next Story