Kamalhasan: நாயை பத்தி கேட்டா கழுதை கதை சொல்லிட்டு போறாரே! எதாவது புரிஞ்சுதா?..
Kamalhasan: தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படும் செய்தி நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த நாய் எபிசோட் சம்பந்தப்பட்ட செய்தி தான். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக கருதப்படுவது நீயா நானா நிகழ்ச்சி. இதில் சமீபத்தில் தெரு நாய்கள் பற்றிய விவாதம் ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் டாக் லவ்வர்ஸ் என்ற தலைப்பில் ஒரு குழுவும் டாக் ஹேட்டர்ஸ் என்ற தலைப்பில் மற்றொரு குழுவும் பிரிந்து இந்த வாதத்தை தொடர்ந்தார்கள். இவர்களுக்குள் நடந்த வாதம் இப்போது ஒரு பெரிய யுத்தமாக சமூக வலைதளங்களில் பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தெருக்களில் நாய்கள் நடமாட்டம் அதிகமாகி தெருவில் நடந்து வருவோரை கடித்து குதறுவதை பல செய்திகளில் நாம் பார்த்து வருகிறோம்.
அதிலும் குறிப்பாக சிறு குழந்தைகள் இந்த பிரச்சனையில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒரு சில குழந்தைகள் நாய் கடியால் இறந்து விட்டதாகவும் செய்திகளை நாம் பார்த்து வருகிறோம். ஒன்று அல்ல இரண்டு அல்ல ஒட்டு மொத்தமாக பத்து நாய்கள் சூழ்ந்து கொண்டு ஒருவரை கடித்து குதறும் காட்சியையும் நாம் பார்த்து வருகிறோம். இதனால் தெருக்களில் நடமாடுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இதைப் பற்றிய விவாதம் தான் சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் நடந்தது. அதில் டாக் லவ்வர்ஸ் என்ற பெயரில் வாதிட்ட ஒரு சில பேர் நாய்களுக்கு ஆதரவாக பேசியதை பார்க்க முடிந்தது. அதில் படவா கோபி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இரவு 11 மணிக்கு மேல் ஏன் தெருக்களில் நடமாடுகிறீர்கள்? அந்த நேரத்தில் வெளியே வரக்கூடாது என்றெல்லாம் பேசியிருந்தார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்த ஒரு சில பிரபலங்கள் அதிலும் குறிப்பாக அவர்களும் டாக் லவ்வர்ஸ் ஆகவே இருக்கின்றனர். அவர்கள் கோபிநாத்தின் இந்த பேச்சு, நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்கள் எல்லாவற்றையும் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். டிஆர்பிக்காக நாங்கள் பேசியது சில வற்றை அவர்கள் ஒளிபரப்பவே இல்லை. எட்டு மணி நேரம் நடந்த நிகழ்ச்சியை சுருக்கி 45 நிமிடத்தில் ஒளிபரப்புகிறார்கள் என்றால் அதில் என்னென்ன விஷயங்கள் மறைக்கப்பட்டு இருக்கலாம்?
இது முழுக்க முழுக்க டிஆர்பிக்காகவே நடந்தது தான் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் தெரு நாய் தொல்லைக்கு தீர்வு என்ன என்ற ஒரு கேள்வியை நடிகர் கமலிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு கமல் அளித்த பதில் இதோ. தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க. விஷயம் தெரிந்தவர்கள், உலகம் சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்பதை தெரிந்தவர்கள் கழுதை எங்கே காணோம் என யாராவது கவலைப்படுகிறார்களா ?
கழுதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டதே .நமக்காக எவ்வளவு பொதி சுமந்து இருக்கிறது. இப்போ பார்க்கிறது இல்லையே கழுதையை. கழுதையை யாராவது காப்பாத்தணும்னு பேசுறாங்களா? எல்லா உயிர்களையும் காப்பாத்தணும். எவ்வளவு முடியுமோ காப்பாத்தணும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து என நாயை பற்றி கேட்டால் கழுதையை பற்றி வழக்கம் போல குழப்பிவிட்டு சென்றார் கமல்.
