அமரன் படத்தோட கிளைமாக்ஸை முதல்ல கேட்டது அவரா? கமல் சொன்ன சூப்பர் அப்டேட்

by sankaran |
amaran
X

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிக்க கமல் தயாரித்துள்ள படம் அமரன். அமரன் படம் வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கான கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் படவிழாவில் கமல் கலந்து கொண்டு பேசியது இதுதான்.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு, குருதிப்புனல், சத்யா இதெல்லாம் புனைக்கதைகள். அந்த வரிசையில் சொல்ல முடியாது. இது அதுவல்ல. நிஜம். நமக்காக நடந்த நிஜம். இது ஏன் அப்படிப் போச்சுன்னு கேட்கவே முடியாது. இது தான் கதை.

இதைத் தாங்கிக்க முடிஞ்சா தாங்கிக்கோங்க. என்றார் கமல். அப்போது இந்தக் கதையின் உண்மையான கதாநாயகியான மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவியும் விழாவில் கலந்து கொண்டார்.


அவரது பெயர் இந்தூ ரெபேக்கா வர்கீஸ். கமல் பேசுகையில், இந்தக் கதையின் கிளைமாக்ஸை முதல்ல கேட்டவங்க இவங்க தான் என்று அவரைக் குறிப்பிட்டுச் சொன்னார். நம்ம அவங்களுக்குப் பதக்கம் கொடுத்தோம்.

இந்த வீரருக்கு நிகரான வீரம் வீட்டிலும் இருக்கணும். அதைப்பற்றிய கதையும் இதுதான். அந்த நிஜம் எல்லா தாய்மார்களுக்கும், எல்லா மனிதர்களுக்கும் புரியும். இது வித்தியாசமான கதை. இந்தக் கதையை நாங்க தேர்ந்தெடுக்கவில்லை. இது நிகழ்ந்து விட்டது. நாங்கள் கண்டெடுத்ததில் பெருமை அடைகிறோம். எங்களது பங்கு இந்தக் கடமையைச் செய்தது தான் எங்களது பங்கு என்கிறார் கமல்.

படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேசும்போது, இது எங்கே ஆரம்பிக்குது? எங்கே முடியுதுன்னு தெரியாம இருந்தது. அன்னைக்குத் தான் இவங்களை (மேஜர் முகுந்தனின் மனைவி) சந்தித்ததும் தான் தெரிந்தது. அவங்களை சந்தித்ததும் தான் ஸ்கிரிப்டே உருவானது. ஒரு மனைவிக்கு கணவனின் மேல் உள்ள காதல். ஒரு வீரனுக்கு நாட்டின் மேல் உள்ள தணியாத பற்று. அது தான் படம் என்றார்.

சிவகார்த்திகேயன் பேசுகையில் துப்பாக்கி எப்போதுமே ரொம்ப கனமானது. அதைக் கரெக்டா ஹேண்டில் பண்ணனும். அதை முடிஞ்ச அளவுக்கு செஞ்சிருக்கோம். அதைத் தாண்டி எங்களுக்குத் தைரியம் கொடுக்க உலகநாயகன் இருக்காரு. இந்தக் கதையை நாங்க தேர்ந்தெடுக்கல. எங்களைத் தான் கதை தேர்ந்தெடுத்து இருக்கு என்றார்.

Next Story