நடிப்பை விட எனக்குப் பிடிச்ச விஷயம் அதுதான்... கமல் அதிரடியா சொல்லிட்டாரே!

by SANKARAN |
kamal
X

மணிரத்னம், கமல், சிம்பு காம்போவில் அதிரடியாக விரைவில் வர உள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது ஜரூராக நடந்து வருகின்றன. இதையொட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு கமல் அளித்த பிரத்யேகப் பேட்டி இது. அதில் இருந்து அவர் உதிர்த்த ஒரு சில வார்த்தைகளைப் பார்ப்போம்.

இன்னைக்கு வரைக்கும் ரிகர்சல் பண்ணித்தான் நடிச்சிக்கிட்டு இருக்கேன். ரிகர்சல் இல்லாம நான் பண்ணினதே கிடையாது. மணி சார் பர்ஸ்ட் படம் பண்றதுக்கு முன்னாடி இன்னைக்கு என்ன சூட்டிங் இருக்கான்னு கேட்பாரு. இல்ல இன்னைக்கு ரிகர்சல்னு சொல்வேன்.

நான் வந்த போது ரிகர்சல் ஹால்னே இருந்தது. அப்போ எஸ்.ஏ.அசோகன், ஆனந்தன் சார் எல்லாம் கத்திச்சண்டை போட்டு ரிகர்சல் பண்ணுவாங்க. அதுக்கு அப்புறம் நான் ரிவர்ஸ்ல போனேன். சினிமாவுல இருந்து நாடகத்துக்குப் போனேன். சண்முகம் அண்ணாச்சி ஒரு மாசம் ரிகர்சல் நடத்துவாரு.

எல்லாரும் உட்கார்ந்துருக்குறோம். டெஸ்க் போட்டுட்டு கணக்குப்பிள்ளை மாதிரி கீழே உட்கார்ந்துருப்பாரு. சுத்தி நாங்க இருப்போம். அவங்க அவங்க பாடத்தை எப்படி படிச்சிக்காட்டணுமோ அப்படி படிச்சிக் காட்டுவாரு. ஒவ்வொரு கேரக்டரா டீல் பண்ணுவாரு. முதல்ல ஃபுல்லா வேற யாராவது படிக்கச் சொல்வாரு.

அப்புறம் மெய்ன் கேரக்டரைச் சொல்வாரு. அப்புறம் சின்ன கேரக்டரைச் சொல்வாரு. நாலாவது ஐந்தாவது நாள்ல இருந்து அவங்க அவங்க புத்தகத்தைப் பார்த்துப் படிக்கணும். 10வது நாள் புத்தகத்தை மூடிட்டுப் படிக்கணும். கரெக்டா எல்லாருமே பார்க்காம உட்கார்ந்து சொல்லிடுவோம். அந்த லெவல் வர்ற வரைக்கும் எங்களை நிக்க வைக்க மாட்டாரு. அப்புறம் நின்னு படிக்க வைப்பாரு. கடைசி 3 நாள் கிராண்ட் ரிகர்சல்.


அதுக்காக ரெண்டு டிரஸ் தைச்சி வச்சிருப்போம். ஏன்னா ரிகர்சல்ல வியர்வையா வரும். அதனால அரங்கேற்றத்துக்கு புது டிரஸ் போடுவோம். அதுக்கு முன்னாடி 2 ஷோ வரும். அதுல உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் பார்ப்பாங்க. ரிகர்சல் வந்து எனக்கு சினிமா, ஆக்சுவல் ஆக்டிங்கை விட ரொம்ப பிடிக்கும். ஏன்னா இங்க தான் நான் கத்துக்க முடியும். அதனால இன்னைக்கும் ரிகர்சல் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

சொல்லிக் கொடுக்குறதுல ஒரு சின்ன ட்ரிக் இருக்கு. சொல்லிக் கொடுக்கும்போதுதான் நாம கத்துக் கொடுக்க முடியும். அதனால தான் சிலர் 8ம் கிளாஸோடு நின்று விடுறாங்க. வாத்தியாராவே. சில பேரு புரொமோட் ஆகிப் போவாங்க. ஸ்டூடண்ட்ஸ்சும் அப்படித்தான் ரிகர்சல் இல்லாம நான் டைரக்டா நடிப்பேன்னு சொல்றது சில்லரைத்தனம் என்கிறார் புன்முறுவலுடன் கமல்ஹாசன்.

Next Story