கடவுள் இல்லையாம்... ஆனா கமல் சொல்ற அந்த சூப்பர் பவர் எது? ஒரே குழப்பமா இருக்கா?

தக் லைஃப் படத்தின் புரொமோஷன் படு ஜோராக போய்க்கொண்டு இருக்கிறது. திரும்பிய பக்கம் எல்லாம் தக் லைஃப் பற்றிய பேச்சு தான். படக்குழுவினர்களும் குறிப்பாக கமல், மணிரத்னம் இருவரையும் பல யூடியூப் சேனல்களில் பார்க்க முடிகிறது.
மணிரத்னம் உடன் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைகோர்க்கிறார் கமல். நாயகன் படத்தின் வெற்றி மீண்டுமா என ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஹைப் எகிறி வருகிறது. அது பத்தாதுன்னு கமலைப் போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது சக்கை போடு போட்டு வருகிறார் சிம்பு. அவரும் இந்தக் கூட்டணியில் இணைந்து விட்டார்.
அது மட்டும் அல்லாமல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து விட்டார். அப்படின்னா வெற்றிக்கூட்டணி என்பதில் சந்தேகமா என்ன? சரி விஷயத்துக்கு வருவோம். கமலைப் பொருத்த வரை கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பது தெரிந்த விஷயம். அவரது தசாவதாரம் படத்தில் கூட ஒரு காட்சியில் 'நான் கடவுள் இல்லைன்னு எங்கே சொன்னேன்.

இருந்து இருந்தா நல்லாருக்குமேன்னு தானே சொல்றேன்'னு சொல்லி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தி இருப்பார். அந்த வகையில் இப்போதும் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இதைப் புரிஞ்சவங்க ரொம்ப அறிவுஜீவிகள் தான்.
நான் ஏதாவது ஒரு சக்தியை நம்ப வேண்டும் என எல்லாரும் சொல்றாங்க. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதனால் நான் திசை திருப்பப்படவில்லை. நான் நம்பும் ஒரே சூப்பர் பவர் என் தலைக்குள் இருக்கிறது. அது என்னை தண்டிக்கும். அவமதிக்கும். சில சமயங்களில் பாராட்டும். அந்த சக்திக்கு என்னால் பதில் அளிக்க முடியும்போது வேறு எதையும் நான் வணங்காமல் இருப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார் கமல்.
தக் லைஃப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. படம் வரும் ஜூன் 5ல் ரிலீஸ் ஆகிறது.