இளையராஜாவை பலாப்பழம் ஆக்கிய கமல்... விஷயம் இருக்குங்கறதுக்கா இப்படியா சொல்வாரு...?
இசைஞானி இளையராஜா கமல், ரஜினி மட்டும் அல்லாமல் பல நடிகர்களுக்கும் சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். மோகன், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த், ராமராஜன் என இவர் இசை அமைக்கிற படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட். குறிப்பாக பாடல்களுக்காகவே ஓடிய படங்களும் ஏராளமாக உள்ளன.
இந்தக் காம்போவில் கமல், இளையராஜா கூட்டணிக்கு எப்போதுமே மவுசு தான். இப்போது கேட்டாலும் அந்தப் பாடல்கள் எல்லாமே நமக்கு பேவரைட்டாகவே இருக்கும். இது கமல் ரசிகன் என்பதையும் தாண்டி அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.
16 வயதினிலே, ராஜபார்வை, காக்கிச்சட்டை, விக்ரம், எனக்குள் ஒருவன், புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள், பேர் சொல்லும் பிள்ளை, சகலகலா வல்லவன், வெற்றிவிழா, குரு, ஒரு கைதியின் டைரி, தேவர்மகன், மூன்றாம்பிறை, விருமான்டி, ஹேராம் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
கமல் படங்களைப் பொருத்தவரை இளையராஜா இசை என்றால் எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களும் ஹிட் அடிக்கும். அதுதான் ஆச்சரியம். அந்த வகையில் நான் எப்போதும் இளையராஜாவின் ரசிகன் என்றும் கமல் அவரை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் பேசுவார்.
அந்த வகையில் இளையராஜாவைப் பற்றி சிலர் மிகவும் கௌரவம் பிடித்த நபர். அவர் பெரிய கோபக்காரர். அவரிடம் திறமை இருக்குறது. அதே நேரம் ஆணவமும் அதிகமாக உள்ளது என்றெல்லாம் பலரும் பேசுவதைக் கேள்விப்பட்டு இருப்போம். இதற்கு கமல் சொல்லும் பதில் என்ன தெரியுமா? வாங்க பார்ப்போம்.
இளையராஜா பலாப் பழம் மாதிரி. வெளிய தான் முள்ளு மாதிரி இருக்கும். உள்ள ஸ்வீட். அவரு எல்லா இடத்துலயும் ஸ்வீட் தான். உன் நாக்குல முள்ளு இருந்தா நாங்க என்ன பண்றது? என்னங்க நீங்க இப்படி ஜால்ரா போடுறீங்கன்னு கேட்பாங்க. பாட்டு அப்படி இருக்கு. என்ன பண்றது? எங்கிட்ட இருக்குறது அதான. அதுனால ஜால்ரா போடுறேன். போய்யான்னு சொல்லிடுவேன் என்கிறார் கமல்.
மற்ற நடிகர்களின் படங்களைக் காட்டிலும் கமல் படத்தில் ஒரு படி மேலாகப் பாடல் தூக்கலாக இருக்கும். இதுக்கு என்ன காரணம்னா இளையராஜாவிடம் இருந்து எப்படிப்பட்ட பாடல்களை வாங்க வேண்டும் என்பதில் அவர் பக்கத்தில் இருந்தே கறந்து விடுவாராம் கமல்.