பன்முகக் கலைஞன் நாகேஷின் நினைவுநாள்... அவரைப் பற்றி கமல் என்ன சொல்றாருன்னு பாருங்க...

by Sankaran |   ( Updated:2025-01-31 10:08:18  )
kamal, nagesh
X

எம்ஜிஆர், சிவாஜி படங்களில் காமெடியில் அட்டகாசமாக நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் நாகேஷ். இவரது பாடிலாங்குவேஜ் ஒன்றே போதும். டயலாக்கே தேவையில்லை. நமக்கு சிரிப்பு சிரிப்பாக வந்துவிடும். அந்த வகையில் தனக்கென தனி பாணியைக் கடைபிடித்து ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த பெருமை நாகேஷையேச் சேரும்.

நினைவுநாள்: அந்தவகையில், தமிழ்சினிமா உலகின் மாபெரும் நகைச்சுவை கலைஞரான நாகேஷூக்கு இன்று(ஜன.31) நினைவுநாள். கமல்ஹாசனே இவரது தீவிர ரசிகர். அந்த வகையில் கமல் எந்தப் பேட்டியை எடுத்தாலும் தவறாமல் சிவாஜி, பாலசந்தருடன், நாகேஷையும் மிஸ் பண்ணாமல் பேசி விடுவார்.

ரிகர்சல்ல இல்லாம நடிப்பு: வார்த்தைக்கு வார்த்தை நாகேஷ் என்பார். நாகேஷ் இருந்தா அந்தக் காட்சியில் எப்படி நடிச்சிருப்பாரு? அவரை மாதிரி நடிக்க முடியுமா? அவர் எப்படி எக்ஸ்பிரஷன் கொடுத்திருப்பாரு? நாகேஷ் எப்படி ரிகர்சல்ல இல்லாம டேக்ல வேற ஒண்ணை அடிச்சிருப்பாரு?


பன்முகக் கலைஞன்: நகைச்சுவை நடிகர், வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்தக் கேரக்டர் ஆனாலும் அசத்தலாக நடிக்கக்கூடியவர்தான் நாகேஷ். பிணமாகக் கூட நடித்து ஜெயித்தவர் அவர். கமல் படமான அபூர்வசகோதரர்கள்ல வில்லன் நாகேஷ். நம்மவர்ல குணச்சித்திர நடிகராக வந்து தேசிய விருதை அள்ளிச் சென்றார். கமல் படமான மகளிர் மட்டும்ல தான் பிணமாக நடித்து அசத்தினார் நாகேஷ்.

மைக்கேல் மதன காமராஜனில் நாகேஷின் காமெடி படுசூப்பராக இருக்கும். அந்த மாதிரி டெலிவரியை யாரும் பண்ண முடியாது. தில்லானா மோகனாம்பாள் படத்துல காமெடியில் பின்னிப் பெடல் எடுத்திருப்பார். கூனியும், கைகேயியும் சேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நடிப்பைக் கொடுத்திருப்பார்.

தருமி: திருவிளையாடல் தருமி, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் படங்களில் நாகேஷின் சிறந்த நடிப்பைப் பார்க்கலாம். அவருக்கு நிகர் அவர்தான். 2009ம் ஆண்டு இதே நாளான ஜனவரி 31ல் தான் நாகேஷ் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story