ஏஐயில் உருவாகிறது மருதநாயகம்...! கமல் செய்யப் போகும் கூஸ்பம்ப்ஸ் மேட்டர்!

by sankaran |   ( Updated:2024-09-27 02:30:24  )
Kamal, Maruthanayagam
X

கமல் தற்போது அமெரிக்காவிற்குச் சென்று ஏஐ தொழில்நுட்பத்தைப் படிக்கிற விஷயம் தான் ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதைப் படித்து விட்டு என்ன செய்யப் போகிறார்? என்று தான் பரபரப்பாகப் பேசுறாங்க.

இந்தத் தொழில்நுட்பத்தை கேஎச்237, கல்கி 2 ஆகிய படங்களில் பயன்படுத்தப் போகிறாராம். ஏஐ கோர்ஸ்சுக்கு பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனும் வருகை தருகிறாராம்.

கமல் ஏஐ தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வதற்கு மிக முக்கியமான காரணம் இது தானாம். அவர் தனது லட்சியப்படமான மருதநாயகத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படிக்கிறாராம். அதற்கு மணிரத்னமும் கொஞ்சம் உதவுவார்னு சொல்றாங்க.

கண்டிப்பாக கமல் அந்தப் படத்தை எடுப்பார்னும் பல பத்திரிகையாளர்கள் சொல்லி வர்றாங்களாம். ஏஐ தொழில்நுட்பத்தில் யூத் கமலைப் பிரமாதமாகக் கொண்டு வர வாய்ப்புள்ளதாம். கமல் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டால் அதை தெளிவாகக் கற்றுக் கொள்வார்.

அதனால் அவரது பிரசன்டேஷனும் அற்புதமாக இருக்கும். அது எப்படி வரப்போகிறதுன்னு பலருக்கும் ஒரு கூஸ்பம்ப்ஸாகவே இருக்கிறது என்றும் சொல்லலாம்.

1997ல் மருதநாயகம் படம் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. கமலின் கனவு மற்றும் லட்சியப்படமாக வரப்போகிறது என்றதும் இந்தியத் திரையுலகமே பரபரப்புக்குள்ளானது. ஆனால் பொருளாதாரச் சிக்கல்களால் படம் தொடர்ந்து உருவாக முடியாமல் போனது.

கமல் இந்தப் படத்தின் துவக்கவிழாவுக்காக இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தையே அழைத்து வந்தது பலருக்கும் வியப்பை வரவழைத்தது.


கமலுடன், விஷ்ணுவர்த்தன், நாசர், சத்யராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மீண்டும் இந்தப் படம் எப்போது துவங்கப்படும் என்றதற்கு படத்திற்கான பட்ஜெட் மிகப்பெரியது. தயாரிக்க யாராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும் என்று கமல் தெரிவித்து இருந்தார்.

ஆனால் அது அந்தப்படம் வெளியாவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தைத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்னும் சிலரோ கமல் ஏஐ மட்டும் படிக்க அமெரிக்காவுக்குச் செல்லவில்லை. பொலிடிகல் சயின்ஸ்சும் படிக்க உள்ளார் என்கிறார்கள். எது எப்படியோ மருதநாயகம் மீண்டும் வந்தால் சரிதான் என்கிறார்கள் நம்மவர்கள்.

Next Story