அமரன் படத்தை முதலில் பார்க்கப்போவது யார் தெரியுமா?!.. கமல் போடும் பக்கா ஸ்கெட்ச்!..

by Murugan |   ( Updated:2024-10-16 13:30:28  )
amaran
X

amaran

Amaran movie: விக்ரம் திரைப்படத்தின் மெகா வெற்றிக்கு பின் ஒரு தயாரிப்பாளராக மீண்டும் பிஸியாகிவிட்டார் கமல். அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் மீண்டும் தூசி தட்டப்பட்டு புதிய படங்களை எடுக்க துவங்கியது. சிம்புவை வைத்து ஒரு புதிய படத்தை அறிவித்தார் கமல்.

அந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. இப்போது சில காரணங்களால் அந்த படத்தை தயாரிப்பதிலிருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகிவிட்டது.

அதேநேரம், சிவகார்த்திகேயனை வைத்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. இந்த படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகள் சுட்டதில் இறந்து போன மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய கதையாகும். அதனால், முகுந்த் வரதராஜன் பற்றி அவரின் குடும்பத்தினர், அவருடன் பணிபுரிந்தவர்கள், அவரின் மேலதிகாரிகள் என எல்லோரிடமும் தகவலை சேகரித்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார்.


இதுவரை காஷ்மீரில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட பல இடங்களுக்கும் சென்று சிறப்பு அனுமதியோடு அமரன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். குறிப்பாக, படத்தின் பல காட்சிகளை எடுக்க முகுந்த் வரதராஜனின் மேலதிகாரிகள் உதவி இருக்கிறார்கள்.

இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. கண்டிப்பாக இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கிய படமாக அமையும் என்றே நம்பலாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பாடலையும் படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், ரிலீசுக்கு முன்பே இந்த படத்தை முகுந்த் வரதராஜனின் மேலதிகாரிகளுக்கு போட்டு காட்ட படக்குழு திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால் அவர்களுக்காக ஹிந்தியில் டப் செய்து ஒரு காப்பி உருவாக்கி இருக்கிறார்களாம்.

Next Story