1. Home
  2. Cinema News

Kamalhaasan: புரியாத கமல் பேச்சுக்கு சரியாக லாஜிக் பிடித்த யூட்யூப் பிரபலம்… அந்த தம்பிக்கு புரிஞ்சா சரி!

Kamalhaasan: புரியாத கமல் பேச்சுக்கு சரியாக லாஜிக் பிடித்த யூட்யூப் பிரபலம்… அந்த தம்பிக்கு புரிஞ்சா சரி!

Kamalhaasan: நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படம் குறித்து புரியாமல் பேசிய விஷயத்துக்கு சரியாக லாஜிக் பிடித்து விஷயத்தை உடைத்து இருக்கிறார் பிரபல திரை விமர்சகர் புளூசட்ட மாறன். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் ஒரு படத்தின் கதையை நம்பி ஓட வைப்பதை விட புரொமோஷன் செய்தும், விளம்பரங்கள், பேட்டி கொடுத்தும் ஓட்டிவிடலாம் என நம்புகின்றனர். அந்த வகையில் பெரிய இயக்குனர்கள் கூட இதை செய்கின்றனர். 

இதன் காரணமாக கதையே இல்லாத படத்திற்கு ஓவர் புரொமோஷன் செய்துவிட்ட சூப்பர்ஹிட் கொடுக்கும் என ஓவர் ஆசையில் இயக்குனர்கள் இருப்பதால் ரசிகர்களும் கடுப்பில் இருக்கின்றனர். அந்த வகையில் டாப் நடிகர்களின் படங்களே தற்போது மண்ணை கவ்வி கொண்டு இருக்கிறது. 

தமிழ் சினிமாவின் உலக நாயகன் எனக் கூறப்பட்ட கமல்ஹாசன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசி இருக்கும் ஒரு விஷயம் வைரலாகி இருக்கிறது. விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

Kamalhaasan: புரியாத கமல் பேச்சுக்கு சரியாக லாஜிக் பிடித்த யூட்யூப் பிரபலம்… அந்த தம்பிக்கு புரிஞ்சா சரி!
kamalhaasan

அதை உறுதிப்படுத்திய கமல்ஹாசன், நடிக்கிறோம். ஆனால் அது தரமான சம்பவமா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். படம் வருவதற்கும் முன் தரமான சம்பவம் என சொன்னால் எப்படி? மக்கள் தரதரவென இழுத்து விடுவார்கள். படத்தை சிறப்பாக எடுத்துவிட்டு காட்டுவோம். மக்களுக்கு பிடித்தால் மகிழ்ச்சி எனப் பேசி இருந்தார்.

இந்த விஷயம் வைரலாகி வரும் நிலையில் புளூசட்ட மாறன் தன்னுடைய எக்ஸ் பதிவில், படம் ஜெயிச்ச பிறகு பேசுங்க. ஆடியோ லாஞ்ச் மற்றும் யூட்யூப் பேட்டியில‌ ஓவரா வாய்விட்டு படத்தை கவுக்கற வேலையை பாக்காதீங்கன்னு சொல்றாரு. மண்டைல ஏறுனா சரி எனக் கலாய்த்து இருக்கிறார். 

விக்ரம் மற்றும் கைதி படத்துக்கு லோகேஷ் பேட்டியே கொடுக்கவில்லை. கதையை நம்பினார். படம் சூப்பர்ஹிட். ஆனால் லியோ, கூலி படத்துக்கு சமீபகாலமாகவே லோகேஷ் பெரிய அளவில் பேட்டி கொடுத்ததே நெகட்டிவ் விமர்சனத்துக்கு காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.