மீண்டும் இணையும் மணிரத்னம் - கமல்!.. தக்லைப் 2 வருமா?1.. பரபர அப்டேட்!...
கமலும், மணிரத்னமும் நெருங்கிய உறவினர்கள் என்றாலும் நாயகன் என்கிற ஒரு படத்தில் மட்டுமே இருவரும் இணைந்தனர். நாயகன் படம் இப்போதும் தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மும்பையில் கெத்து காட்டிய தமிழர் ஒருவரின் நிஜ வாழ்க்கையை படமாக எடுத்திருந்தார் மணிரத்னம்.
1987ம் வருடம் இப்படம் வெளியானது. அதன்பின் 37 வருடங்கள் கழித்து மீண்டும் கமலும், மணிரத்னமும் தக் லைப் திரைப்படம் மூலம் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானபோதே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விக்ரம் படம் கமலின் மார்க்கெட்டை மீண்டும் கொண்டு வந்திருப்பதால் இது சாத்தியமாக்கி இருக்கிறது.
தக் லைப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் முதலில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இருவரும் வெளியேறினார்கள்.
அதன்பின் சிம்பு இந்த படத்தில் உள்ளே வந்தார். தற்போது தக் லைப் படத்தில் கமலும், சிம்புவுமே முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. கமல் இல்லாத சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டியிருக்கிறது.
கமல் அமெரிக்காவுக்கு சென்று சில மாதங்கள் தங்கியிருக்க திட்டமிட்டிருப்பதால் அவரின் காட்சிகள் முதல் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. சமீபத்தில் எடுத்த காட்சிகளை ரஃப் எடிட் செய்து கமலுக்கு காட்டியிருக்கிறார் மணிரத்னம். அதைப்பார்த்த கமலுக்கு முழு திருப்தியாம்.
அதோடு, இந்த கூட்டணி மீண்டும் தொடர ஆசைப்படுகிறேன் என மணிரத்னத்திடம் சொல்லியிருக்கிறாராம். தக்லைப் சூப்பர் ஹிட் அடித்தால் தக்லைப் 2 வருவதற்கு வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. கமலும், மணிரத்னமும் மீண்டும் மீண்டும் இணைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.