திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கட்ட கமல்ஹாசன் அண்ணன்… வெளியான வீடியோ…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:25  )

Kamalhassan: கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

பரமக்குடி என்ற ஊரை சேர்ந்த வழக்கறிஞர் டி. சீனிவாசன் மற்றும் ராஜலட்சுமிக்கு மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு மகள் இருந்தார்கள். இவர்களில் கமல்ஹாசன் தான் கடைக்குட்டி. முதலில் பிறந்தவர்கள் சந்திரஹாசன், சாருஹாசன்.

அப்பாவை போல முதல் இரண்டு மகன்களும் சட்டம் படித்தனர். பல வருடங்கள் கழித்து கமல்ஹாசன் பிறந்ததால் அவருக்கு மூன்று அப்பா என்றே சொல்லலாம். உன்னைப்போல் ஒருவன் மற்றும் தசாவதாரத்தில் "கல்லை மட்டும்" பாடலில் தனது பெற்றோரை குறித்து பேசி இருப்பார் கமல்ஹாசன்.

இதில் மூத்த அண்ணனான சந்திரஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸின் பங்குதாரராக இருந்து அதை நிர்வகித்து வந்தார். 2017 ஆம் ஆண்டு அவருடைய மகளும் நடிகையுமான அனுஹாசன் வீட்டில் இருந்தபோது மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் அவரை தன்னுடைய தந்தை எனக் குறிப்பிட்டு வெளியிட்ட இரங்கல் ரசிகர்களிடம் வைரலாக பரவியது.

அதுபோல அவரது மூத்த சகோதரர் சாருஹாசன், கமல்ஹாசனைப் போலவே, கன்னடத் திரைப்படமான தபரனா கதேவில் தோன்றி தேசிய திரைப்பட விருது பெற்ற நடிகர் ஆவார். சாருஹாசனின் மகள் சுஹாசினி. இந்நிலையில் தற்போது சாருஹாசன் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் செய்ய இருக்கும் திடீர் அறுவை சிகிச்சை காரணமாக சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story