அன்பறிவு படத்துக்கு டாட்டா காட்டிய கமல்ஹாசன்… அப்போ அடுத்து என்ன படம் தெரியுமா?

Kamalhassan: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அன்பறிவு இயக்க இருந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தாலும் அவரை தற்போதைய தலைமுறைக்கு பிரபலமாக வைத்திருந்தது பிக் பாஸ நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சிக்கு வந்த பின்னர் அவருக்கு ரசிகர்கள் இன்னும் ஏராளமாகினர்.

இதைத்தொடர்ந்து வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இந்தியன் 2வை முடித்திருக்கும் நிலையில் இந்தியன்3 இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் வெளியாகி வசூல் சாதனை படைத்த கல்கி 2898ஏடி திரைப்படத்தின் இரண்டாம் பகுதியில் கமல்ஹாசன் தான் முக்கிய வில்லன் என்பதால் அதற்குரிய படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருந்த திரைப்படம் சமீபத்தில் கைவிடப்பட்டது.

கமல்ஹாசனின் 235 படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தும், 236வது படத்தை நெல்சனும் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் 237வது படத்தை சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது..

நடன இயக்குனர்கள் அன்பறிவு மாஸ்டர், கைதி, கே ஜி எஃப் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது. தற்போது இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் கைவிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

ஏற்கனவே கமலுடன் ஹெச் வினோத் இணைய இருந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் கைவிட்ட நிலையில் தற்போது இப்படத்தையும் கைவிட்டு இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles
Next Story
Share it