ரிலீஸுக்கு முன்பு இவ்வளவு கோடி பிஸ்னஸ்?.. சைலண்டா சம்பவம் பண்ண ராகவா லாரன்ஸ்!..
திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களிடம் பிரபலமானவர் ராகவா லாரன்ஸ். அதன்பின் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். துவக்கத்தில் அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். ஹாரர் காமெடி படங்கள் இவருக்கு கை கொடுத்தது.இவர் இயக்கி நடித்த முனி திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்க தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களை இயக்கி நடித்தார். இந்த படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இதுபோக மற்ற இயக்குனரின் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் சந்திரமுகி 2 படத்திலும் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் ஹிட் அடிக்கவில்லை. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் எனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் காஞ்சனா 4 படத்தையும் எடுத்து வருகிறார் லாரன்ஸ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இந்நிலையில் காஞ்சனா 4 திரைப்படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே 110 கோடி வியாபாரத்தை தொட்டிருக்கிறது. இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் மற்றும் ஹிந்தி சேட்டிலைட் உரிமைகளை மும்பையை சேர்ந்த விநியோகஸ்தர் மனீஷ் என்பவர் 60 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார். அதேபோல் ஹிந்தியை தவிர்த்து மற்ற சாட்டிலைட் உரிமைகளை சன் தொலைக்காட்சி நிறுவனம் 50 கோடி விலைக்கு வாங்கி இருக்கிறதாம்.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய படங்களின் தொலைக்காட்சி உரிமை சன் டிவியிடம்தான் இருக்கிறது. இந்த படங்களை எப்போது சன் டிவியில் ஒளிபரப்பினாலும் நல்ல டிஆர்பி-யை பெறுகிறது. அதனால்தான் கலாநிதி மாறன் 50 கோடி கொடுத்து காஞ்சனா 4 உரிமையை வாங்கி இருக்கிறார் என்கிறார்கள்.
ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் பட உரிமைகள்தான் அதிக விலை போகும் என சொல்லப்படும் நிலையில் ராகவா லாரன்ஸ்க்கும் இவ்வளவு பெரிய வியாபாரம் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
