’கோட்’ மட்டுமல்ல கங்குவாவிடம் கூட மண்ணை கவ்விய விடாமுயற்சி… இந்த அசிங்கம் தேவையா?

by Akhilan |   ( Updated:2025-02-06 12:28:27  )
vidaamuyarchi
X

Vidaamuyarchi: அஜித்குமார் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் மீண்டும் கோட் மற்றும் கங்குவா திரைப்படத்திடம் தோல்வியை தழுவி இருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பு செய்திருக்கிறார்.

ஹாலிவுட்டில் வெளியான லாக் டவுன் படத்தினை மையமாக வைத்து ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. ஆனால் காலசூழ்நிலையால் அப்படம் பல முறை தள்ளிப்போனது.


இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பரில் முடிந்தது. இதையடுத்து திரைப்படம் பொங்கல் ரிலீஸில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி முதல் தேதியில் சில பல பிரச்னைகளால் படத்தின் ரிலீஸை பொங்கல் தினத்தில் இருந்து பின்வாங்கியது.

இதையடுத்து பிரேக் டவுன் படத்தின் ரீமேக் உரிமை பிரச்னைக்காக அவர்கள் கொடுத்த உத்தரவின் பேரில் தான் இந்த திரைப்படம் தள்ளிப்போனதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பிப்ரவரி 6ந் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

இப்படம் மற்ற முன்னணி நடிகர்கள் படங்களில் புக் மை ஷோ ஆப்பில் ரிலீஸுக்கு முன் இரண்டு நாட்கள் இருக்கும் போது டிக்கெட் விற்பனையில் விஜயின் லியோ மற்றும் கோட் படங்கள் முன்னிலை வகித்தது. அதை தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இடம் பெற்றது.

இதையடுத்து, ஐந்தாவது இடத்தினை தான் அஜித்தின் விடாமுயற்சி இடம்பெற்றது. இந்நிலையில் முதல் நாளில் புக் மை ஷோ ஆப்பில் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை புக் செய்யப்பட்ட விற்பனை கணக்கில் முதலிடத்தினை தி கோட் மற்றும் அமரன் படங்கள் இடம்பெற்றுள்ளது.

வேட்டையன் மற்றும் இந்தியன் 2 படங்கள் அடுத்த இடங்களை பெற்றது. ஐந்தாவது இடத்தினை சூர்யாவின் கங்குவா இடம்பெற்றுள்ளது. அதை தொடர்ந்தே அஜித்தின் விடாமுயற்சி இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் கங்குவா படத்திடம் கூட விடாமுயற்சி தோல்வியை தழுவியுள்ளது.

Next Story