Kantara: எத்தனை படங்கள் வந்தாலும் அசராமல் நின்று ஆடும் காந்தாரா..18ம் நாள் வசூல் என்ன தெரியுமா?

18 நாட்களை கடந்தும் காந்தாரா வசூல் குறையவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. கன்னடத்தில் வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படத்தில் பஞ்சுருளி என்கிற தெய்வத்தை காட்டிய விதம் மற்றும் அந்த காட்சியின் பின்னணி இசை மிகவும் பேசப்பட்டது. முதல் பாகம் ஹிட் ஆகி ரூ.400 கோடி வரை வசூலித்தது.
முதல்பாக வெற்றியை அடுத்து ஹாம்பாலே பிலிம்ஸ் நிறுவனமே இரண்டாவது பாகத்தையும் தயாரித்து வெளியிட்டது. Kantara Chapte 1 என்கிற பெயரில் கடந்த 2ம் தேதி வெளியானது. வெளியான நாள் முதலே பாசிட்டிவான் விமர்சனக்கள் வரவே மக்கள் இப்படத்திற்கு அமோக வரவேற்பு அளித்தனர். இந்த படத்திற்காக மூன்று வருடங்கள் கடுமையாக ரிசப் ஷெட்டி உழைத்துருப்பது கண்கூடாகவே தெரிகிறது.
கன்னடம் மட்டுமின்றி ஹிந்தியில் கூட இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி 4 படங்கள் வெளியாயின. குறிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ட்யூட், மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் மிகுந்த எதிர்பார்ப்பில் வந்தன. இவ்வளவு படங்கள் வந்தும் காந்தாரா வசூல் குறையவில்லை என்றே தெரிகிறது. 18 நாட்கள் முடிவில் இப்படம் ரூ.765 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.