
Cinema News
Kantara Chapter 1: 5 முறை சாவிலிருந்து தப்பித்தேன்!.. பிரெஸ்மீட்டில் ஃபீலிங்கா பேசிய காந்தாரா ஹீரோ!..
தமிழில் ஹிட் அடித்த Kantara:
Kantara: பிறமொழி படங்களில் சில படங்கள் திடீரென தமிழில் வெளியாகி தமிழக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்து விடும். அப்படி 2002ம் வருடம் வெளியாகி தமிழ்நாட்டில் நல்ல வசூலை பெற்ற படம்தான் காந்தாரா. அந்த படம் வெளியாவதற்கு முன் அந்த படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் ரிசப் ஷெட்டியை பற்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியாது. எப்படி KGF-ல் யாஷ் பிரபலமானாரோ அப்படி இந்த படம் மூலம் இவரும் பிரபலமானார். இந்த படம் ஹிட் அடிக்கவே தமிழ்நாட்டுக்கு வந்து புரமோஷன் செய்தார். தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்கள் இவரை அழைத்து இப்படத்தைப் பற்றி பாராட்டி பேசினார்கள்.
கர்நாடகாவில் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை, காதல், குற்றங்கள், நம்பிக்கை துரோகம், அரசியல், அவர்களின் தெய்வ நம்பிக்கை ஆகியவற்றை காந்தாரா படம் பேசியிருந்தது.
குறிப்பாக காந்தாரா படத்தில் காட்டப்பட்ட காவல் தெய்வம் ரசிகர்களை உலுக்கிப் போட்டது. அந்த படத்தின் மெகா வெற்றிக்கும் அதுவே காரணமாக இருந்தது.

Kantara Chapter 1 – படக்கதை:
சின்ன பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட அந்த படம் 400 கோடி வரை வசூல் செய்தது. தற்போது காந்தாரா சேப்டர் ஒன் உருவாகியுள்ளது. காந்தாரா படத்தின் முந்தைய படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தையும் ரிசப் ஷெட்டியை இயக்கி நடித்திருக்கிறார். மதராஸி பட நடிகை ருக்மணி வசந்த் இந்த படத்தில் கதாநாயகியக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் ஹைப் ஏற்றி இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு கர்நாடக காடுகளில் வாழ்ந்த மக்கள், அவர்களின் தெய்வ நம்பிக்கை, அவர்களை சுரண்டும் மன்னர்கள்ஆகியவற்றை இந்த படம் பேசுகிறது.
Kantara Chapter 1 – மூன்று வருட உழைப்பு
காந்தாரா சேப்டர் ஒன் வருகிற அக்டோபர் 2ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு. ஹிந்தி. மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ரிலீஸாகிறது. எனவே இப்படத்தின் புரோமோஷன் வேலைகளை ரிசப் ஷெட்டி துவங்கி இருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிசப் ஷெட்டி ‘காந்தாரா படத்திற்கு இரண்டு வருடங்கள் உழைத்தோம். காந்தாரா சேப்டர் ஒன் படத்திற்கு மூன்று வருடங்கள் உழைத்திருக்கிறோம். இந்த மூன்று வருடங்கள் என் குடும்பத்தை கூட நான் சரியாக கவனிக்கவில்லை.
சாவிலிருந்து தப்பித்த ஹீரோ:
என் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவில்லை. தொடர்ந்து மூன்று மாதங்கள் எல்லாம் படக்குழு சரியாக தூங்காமல் இந்த படத்திற்காக வேலை செய்தார்கள். டீ கொடுப்பவர் முதல் கொண்டு இந்த படத்தில் வேலை செய்த எல்லோருமே இது தங்களின் படமாக கருதினார்கள். நான்கைந்து முறை நான் மரணத்திலிருந்து தப்பித்து வந்தேன். நாங்கள் நம்பிய கடவுள் என்னை காப்பாற்றியது. இந்த படம் கண்டிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும்’ என பேசி இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த போது விபத்துகளில் சிக்கி மொத்தமாக 5 பேர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.