கைதி2 படத்தில் வில்லன் இவர்தானா? களமிறங்கும் எல்சியூ கூட்டணி.. அப்போ படம் சூப்பர்ஹிட்டு தான்!...

Kaithi2: தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன் முக்கிய படைப்பான கைதி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் மற்றும் படக்குழு குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வெற்றி படமாக இது அமைந்தது. ஒரே நாள் நடக்கும் இக்கதை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் சில கதாபாத்திரங்களை கொண்டு விக்ரம் படத்தில் இணைத்திருப்பார் லோகேஷ் கனகராஜ். இதனால் தமிழ் சினிமாவில் லொகேஷன் படங்கள் எல் சி யு என பெயர் பெற்றது. இதனால் கைதி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்தில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கைதி இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. 50 நாட்களுக்குள் இப்படத்தின் சூட்டிங் முடிக்க படக்குழு திட்டமிட்டு முதற்கட்ட வேலைகளை தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிலும் இப்படத்தில் வில்லனாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைதி படத்தில் இருவரும் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அண்ணன் மற்றும் தம்பி இருவரும் இணையும் முதல் படமாக கைதி இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

Related Articles
Next Story
Share it