விஜய்க்கே சங்கு ஊதினவன்!.. சிவகார்த்திகேயன்லாம் சின்ன பையன்!.. சீறிப்பாய ரெடியாகும் சிறுத்தை!..

விஜயின் பிகில் படத்துக்கு போட்டியாக நடிகர் கார்த்தி தனது கைதி படத்தை இறக்கி இந்தியாவையே அதிரவிட்ட சம்பவம் எல்லாம் மறக்க கூடிய ஒன்றா? மீண்டும் அதே போன்று ஒரு சம்பவத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு செய்ய தயாராகி விட்டார் நம்ம சிறுத்தை ஹீரோ என்கின்றனர்.
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் விஸ்வரூப வளர்ச்சியை பார்த்து பலரும் பயந்து நடுங்கி தங்கள் படத்தை அவருடன் போட்டியாக வெளியிட விரும்பாத சூழலில், கடந்த 2022 ஆம் ஆண்டு தான் செய்த சம்பவத்தை மீண்டும் செய்வேன் என்கிற உறுதியுடன் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படமும் கார்த்தியின் சர்தார் படமும் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியான நிலையில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் தான் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.
இந்த ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் மதராஸி திரைப்படம் அதிகபட்சமாக தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமரன் படத்தின் அதிரி புதிரி வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கேயோ உயர்ந்துவிட்ட நிலையில், அடுத்த ஆண்டு விஜய்யுடன் போட்டி போட தனது பராசக்தி படத்தை தயார் செய்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தையே மிஞ்சி வெற்றி பெற்ற நிலையில், சர்தார் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில், அந்த படத்தின் மீது அளப்பரிய நம்பிக்கையை கொண்டுள்ள நடிகர் கார்த்தி இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் மோத போவது உறுதி என்கின்றனர்.
சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் முன்னதாக ஆயுத பூஜைக்கு வெளியானால் மட்டுமே இந்த மோதல் தவிர்க்கப்படும் என்றும் திரையுலக வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சர்தார் 2 படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து வருகிறார்.