தருதல சினிமாவுக்கு வந்துடுச்சுன்னு கேலி பண்ணினாங்களாம்... ஆனாலும் சாதித்த கார்த்தி!

சிவகுமார் குடும்பத்தில் இருந்து சூர்யா முதலில் சினிமாவில் களம் இறங்கினார். மெல்ல மெல்ல காதல் கதைகளில் நடித்த அவர் ஆக்ஷன் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்த பிறகு பிரபலம் ஆனார். பிதாமகன், கஜினி, ஏழாம் அறிவு படங்கள் அவரை வேற லெவலுக்குக் கொண்டு சென்றன. ஆனால் முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அவரது தம்பி கார்த்தி. அமீரின் இயக்கத்தில் அவர் நடித்த பருத்தி வீரன் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
சூர்யா, கார்த்தி இருவருமே தனித்தனி ஸ்டைலில் நடித்தனர். அதிலும் கார்த்தியின் படங்கள் அத்தனையும் செம மாஸாகின. சூர்யாவுக்குக் கூட கடந்த 13 ஆண்டுகாலமாக பல படங்கள் பிளாப் தான். கடைசியாக வந்த ரெட்ரோ மட்டும் தான் சுமார் ரகம்.
ஆனால் கார்த்தியோ விருமன், சர்தார், மெய்யழகன், பொன்னியின் செல்வன், சுல்தான், கைதி என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இப்போது இவர் நடித்து வரும் படம் சர்தார் 2. இந்தப் படம் வரும் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது. இந்த நிலையில் கார்த்தி சினிமாவுக்குள் நுழைந்தபோது அவரைப் பற்றிய அபிப்ராயம் எப்படி இருந்தது? எப்படி சாதிக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
ஒரு சராசரி மாணவனாக இருந்த நான், சராசரிக்கும் மேல் இருக்கும் மாணவனாக மாறியதற்கு காரணம் எனக்கு பிடித்த விஷயத்தை நான் தைரியமாக தேடி போனேன் என்பதுதான். நான் படிச்சி முடிச்சிட்டு அமெரிக்காவில் தான் இருந்தேன்.
நான் இந்தியா வந்த உடனே நிறைய கேலி பண்ணினாங்க. அமெரிக்காவுல படிச்சிட்டு வேலை செய்யாம, தருதல சினிமாவுக்கு வந்துடுச்சு பாருன்னு சொன்னாங்க. நம்ம அதை எல்லாம் மனசுல போட்டுக்காம ஈடுபாட்டோடு வேலை செய்தோம் என்றால் நினைத் ததை அடையலாம். அப்படி எனக்கு பிடித்தது கலை சார்ந்த விஷயமாக இருந்தது. எப்போ நம்ம மனசுக்கு பிடித்த ஒரு விஷயத்தை நாம் அடையாளம் கண்டுபிடிக்கி றோமோ அதுக்கு அப்புறம் நம்ம வாழ்க்கையே வேற என்கிறார் நடிகர் கார்த்தி.