ரொம்ப ராசியான டைரக்டரோ!.. பல நடிகர்களுக்கு கம்பேக்.. சூர்யாவுக்கும் ஒர்க்கவுட் ஆகுமா?..

by Ramya |
suriya
X

suriya 

கார்த்திக் சுப்புராஜ்: தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். தமிழில் பல முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். அதிலும் நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி ராகவா லாரன்ஸ் வரை பல நடிகர்களை வைத்து படங்களை இயக்கி இருக்கின்றார்.

தற்போது நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகர் சூர்யா:

நடிகர் சூர்யா கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தது.

இதனால் நடிகர் சூர்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகின்றார். கங்குவா திரைப்படத்தை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இப்படம் சூர்யாவுக்கு ஒரு சிறந்த கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பல படங்கள் பல நடிகர்களுக்கு கம்பேக் கொடுத்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்கள்:

தமிழ் சினிமாவில் பீட்சா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் தனது முதல் திரைப்படத்திலேயே மிகச்சிறந்த வரவேற்பு பெற்றார். அதனை தொடர்ந்து இவர் இயக்கிய ஜிகிர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி, எஸ் ஜே சூர்யாவை வைத்து இறைவி என்ற திரைப்படத்தை இயக்கினார்,

இப்படத்தின் மூலமாகத்தான் எஸ் ஜே சூர்யா மீண்டும் நடிகராக கம்பேக் கொடுத்தார். அந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பேட்ட என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் வழக்கமான ரஜினி படங்கள் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது. பேட்ட படத்தை ரஜினியின் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வந்தார்கள். அந்த திரைப்படம் ரஜினிக்கு ஒரு சிறந்த படமாக இருந்தது. அதனை தொடர்ந்து சியான் விக்ரமை வைத்து மகான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இருப்பினும் ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தார்கள்.


அதனை தொடர்ந்து கடைசியாக ஜிகர்தண்டா 2 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இப்படம் ராகவா லாரன்ஸுக்கு மிகச் சிறந்த படமாக அமைந்திருந்தது. இப்படி ரஜினி தொடங்கி ராகவா லாரன்ஸ் வரை பல நடிகர்களுக்கு கம்பேக் கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ். இதனால் சூர்யாவுக்கும் தற்போது ஒரு கம்பேக் தேவைப்படும் நிலையில் நிச்சயம் ரெட்ரோ திரைப்படத்தின் மூலமாக அதனை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Story