கதை என்னது ஆனா படம் அவரது!.. கேம் சேஞ்சர் குறித்து ஓபனாக பேசிய கார்த்திக் சுப்புராஜ்!..
கேம் சேஞ்சர் திரைப்படம்: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் சங்கர். இதுவரை பெரியளவு தோல்விகளை கண்டிராத இயக்குனராக வளம் வந்த ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இந்த திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே தெலுங்கில் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை இயக்குவதற்கு தயாரானார் சங்கர். இந்த படம் துவங்கப்பட்ட பிறகு கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு சில காலம் தடைப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் சங்கர் ஈடுபட்டிருந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பணிகளை முடிப்பதற்கு காலதாமதம் ஆனது.
தற்போது இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் ராம்சரண், எஸ்ஜே சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை வாரிசு திரைப்படத்தை தயாரித்த தில் ராஜு தயாரித்திருக்கின்றார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தது.
படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தொடர்ந்து படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் சங்கர் முதற்கட்டமாக பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுத்து வருகின்றார். எப்போதும் தன்னுடைய கதையை திரைப்படமாக எடுக்கும் சங்கர் முதன் முறையாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறிய கதையை படமாக எடுத்திருக்கின்றார்.
அதனால் கேம் சேஞ்சர் திரைப்படம் சங்கரின் வழக்கமான படங்களாக இருக்குமா இல்லையா என்று சந்தேகம் எழுந்திருக்கின்றது. அதற்கு காரணம் கேம் சேஞ்சர் திரைப்படம் நேரடி தமிழ் படம் கிடையாது, தெலுங்கு படம். இதனால் கேம் ரேஞ்சர் திரைப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து வருகின்றது. படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிப்பதற்காகவே தொடர்ந்து படக்குழுவினர் பிரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து பேசி இருந்தார். அதாவது இந்த திரைப்படத்தின் கதையை முதலில் நான் எழுதியவுடன் எனது டீமில் இருக்கும் நபர்களிடம் இந்த கதை குறித்து டிஸ்கஷன் செய்தேன். இது ஒரு அரசியல் கதையாக தான் நான் எழுதியிருந்தேன்.
இதனை கேட்ட எனது நண்பர்கள் இது இயக்குனரின் சங்கர் கதை போல இருக்கின்றது. அதாவது அவர் எழுதினால் எப்படி இருக்கும் என்பது போல் இருக்கின்றது என்று கூறினார்கள். இது போன்ற கதையை நிச்சயம் ஒரு பெரிய நடிகரை வைத்து எடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று யோசித்தேன். எதற்கு குழப்பம் என்று அவரிடமே இந்த கதையை கொண்டு போய் சேர்த்தேன்.
அவரும் இந்த கதையைப் படித்துவிட்டு தனக்கு மிகவும் பிடித்துப் போனதாக கூறினார். பின்னர் அவரே இந்த திரைப்படத்தை இயக்குகிறேன் என்று கூறியதால் அந்த கதையை இயக்குனர் சங்கரிடம் கொடுத்துவிட்டேன்' என்று தெரிவித்திருக்கின்றார். இந்த பேட்டியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.