அஜித்தை தட்டி தூக்கிய ரஜினி பட இயக்குனர்!.. ஆதிக் ரவிச்சந்திரன் என்னாச்சி?!..

by MURUGAN |
rajini ajith
X

Ajith kumar: அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், அஜித் படங்களை பொறுத்தவரை எந்த ஒரு அப்டேட்டும் உடனே வெளியாகாது. அஜித் நிறைய இடைவெளி விட்டு, நிறைய யோசித்து, பல இயக்குனர்களிடம் கதை கேட்டு பின்னரே முடிவு செய்வார். அதற்குள் அப்டேட் கேட்டு அவரின் ரசிகர்கள் டயர்ட் ஆகிவிடுவார்கள்.

வலிமை படம் உருவான போது சுமார் ஒன்றரை வருடம் எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. அஜித் ரசிகர்கள் பொறுமையிழந்து பல இடங்களிலும் வலிமை அப்டேட் கேட்ட கதை நடந்தது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படமும் முடிவதற்கு பல மாதங்கள் ஆனது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின்னரே படம் வெளியானது. ஆனால், அப்படம் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை.

அதேநேரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களை முழு திருப்திப்படுத்தியது. எனவே, அப்படம் ஓரளவுக்கு வசூலை பெற்றுவிட்டது. அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவரின் இயக்கத்தில் தொடர்ந்து நடிப்பார். அப்படித்தான் ஹெச்.வினோத் இயக்கத்தில் தொடர்ந்து 3 படங்களில் நடித்தார்.


அதேபோல் குட் பேட் அக்லி படத்திற்கு பின்னரும் ஆதிக்கின் இயக்கத்திலேயே ஒரு படத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், தயாரிப்பாளர் உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில் அஜித் கேட்கும் 180 கோடி சம்பளத்தை கொடுக்க யாரும் முன்வரவில்லை. ஒருவழியாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார்.

ஒருபக்கம் அஜித்தை வைத்து படம் இயக்கும் ஆசையில் தனுஷ் இருக்கிறார். ஆனால், அவர் இதுவரை அஜித்தை சந்தித்து கதை சொல்லவில்லை. அதேபோல், அஜித்தை வைத்து படம் இயக்கும் முயற்சியில் கார்த்திக் சுப்பாராஜும் ஈடுபட்டிருக்கிறார். இதில் ஏதேனும் ஒன்று அஜித்துக்கு பிடித்தால் ஆதிக் படத்திற்கு பின் இந்த படம் துவங்கும் என சொல்லப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை வைத்து பேட்ட எடுத்தார். சூர்யாவை வைத்து ரெட்ரோ எடுத்தார். விஜயை வைத்து படமெடுக்க சில முறை முயற்சி செய்தும் விஜய்க்கு கதை பிடிக்கவில்லை. எனவே, அஜித் பக்கம் போயிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். இது நடந்துவிட்டால் விஜயை தவிர மற்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கிவிட்ட திருப்தி அவருக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story