‘கருப்பு’ பட ரிலீஸ் எப்போ? மாஸ் அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி

சூர்யா நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா த்ரிஷா ஆகியோர் நடிப்பில் ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. எஸ் ஆர் பிரபு கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். ஆன்மீக பின்னணியிலும் இந்த படம் தயாராகி இருக்கின்றது.
தீபாவளி ரிலீஸாக இந்த படத்தை திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் குறித்த தேதியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. அடுத்து பொங்கலுக்கு திட்டமிட்டு இருந்தார்கள். அதிலிருந்தும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது. படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் டீசரின் முக்கிய காட்சி சர்ச்சையையும் ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் அது வைரலானது.
இந்த படத்தில் மெயின் வில்லனாக ஆர்.ஜே பாலாஜி தான் நடிக்கிறார் என்ற ஒரு செய்தி வெளியானது. அதை சமீபத்திய ஒரு விழா மேடையில் ஆர் ஜே பாலாஜி உறுதிப்படுத்தியுள்ளார். மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை தான் பார்த்து விட்டதாகவும் படம் நன்றாகவே வந்திருக்கிறது என்றும் ஆர் ஜே பாலாஜி தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தை பற்றி எந்த ஒரு ஹைப்பும் நான் கொடுக்க மாட்டேன். பில்டப் படத்திற்கு செட் ஆகாது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் ரமேஷ் ஆகியோர் ப்ளூ சட்டை மாறனுக்கு இணையாக படத்தை பற்றி நல்ல முறையிலேயே விமர்சித்து இருக்கிறார்கள். அதனால் படம் சிறப்பாகவே வந்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த படத்தில் நானும் நடித்திருக்கிறேன். ஒரு பெரிய தேதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அந்த தேதியில் தான் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம் என்று ஆர்.ஜே பாலாஜி அந்த மேடையில் பேசியுள்ளார்.