பத்தாயிரம் பாடல்கள்... படிப்போ பத்தாவதுதான்..! அசத்திய வாலி பற்றி அறியாத தகவல்கள்

தமிழ்சினிமா உலகில் வாலிபக்கவிஞர் என்றால் அது வாலிதான். இவர் தமிழ்த்திரை உலகில் நவரசங்களையும் சுட்டிக் காட்டும் வகையில் பல்வேறு இடங்களில் பல பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார். வாலியைப் பற்றி ஒருமுறை நடிகர் சோ வீடியோ ஒன்றில் சில கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார். அப்போது அவர் சொன்ன தகவல்கள் தான் இவை.
லௌகீக வாழ்க்கையில் ஆன்மிகம்: கவிஞர்கள் எல்லாம் உணர்ச்சிவசப்படுபவர்கள். எதுவுமே நடுநிலைன்னு கிடையாது. லௌகீக வாழ்க்கையில் ஊறித் திளைத்தவர். ஆனா ஆன்மிகம் பற்றி அருமையா பேசுவார். பணத்தைத் தூசியாக மதிப்பார். ஆனா பணத்துக்காக பாட்டு எழுதுவார். இது ரயில்வே தண்டவாளம் மாதிரி தான்.
அந்த பெரிய திறமை அவருக்கிட்ட இருக்கு. உணர்ச்சி வசப்படாதவனால் கவிஞன் ஆக முடியாது. என்னால அது முடியாது. பாரதியாரும், கண்ணதாசனும் கூட அப்படித்தான் உணர்ச்சிவசப்படுவார்கள். என்கிறார் சோ.
கோபக்காரர்: கலைஞரையும், ஜெயலலிதாவையும் பாராட்டி எழுதுனா அதை ஏன் விமரசிக்கிறீங்க? பாராட்ட வேண்டியதுதானே. அதைத்தானே வாலி செய்திருக்கிறார் என்கிறார் சோ. 1958ல் தமிழ் சினிமா உலகிற்கு வந்து பல தலைமுறை கடந்தும் முன்னணியில் இருந்தவர் கவிஞர் வாலி. ஆனால் அவர் கோபக்காரர். பொதுவாக சினிமாவில் கோபம் உள்ளவர்கள் நிலைத்து நிற்க முடியாது.
ஆச்சரியம்: அந்த வகையில் வாலி ஒரு ஆச்சரியம்தான். ஒரு பக்கம் கோபம் இருந்தாலும், இன்னொரு பக்கம் வளைந்து கொடுக்கக்கூடியவர். மெட்ராஸ் பாஷை, தமிழ் இலக்கணம், பக்தி இலக்கியம், இலக்கியம்னு எல்லாவற்றையும் தொட்டு அசத்தியவர் தான் வாலி. எந்த சூழலைக் கொடுத்தாலும் அவரால் பாடல் எழுத முடியும். அவர் எழுதும் அந்த ஸ்டைல் வேற யாரிடமும் கிடையாது என்றும் சோ தெரிவித்துள்ளார்.
15000 பாடல்கள்: வாலியைப் பொருத்தவரை சினிமா உலகில் 10 ஆயிரம் பாடல்களைத் தாண்டி 15000 பாடல்களுக்கு மேல் எழுதிவிட்டார். ஆனால் அவர் படித்ததோ பத்தாம் வகுப்பு வரை என்பது ஆச்சரியம்தான். அந்தக்காலத்தில் பத்தாம் வகுப்பு என்பது பெரிய படிப்பு என்று கூட நாம் வைத்துக்கொள்ளலாம்.