கைதான ஆண்ட்ரியா… கூலாக கவின்.. வெளியான மாஸ்க் படத்தின் வாவ் போஸ்டர்!

Mask: கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்க் திரைப்படத்தின் தீபாவளி போஸ்டர் வெளியாகி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
சின்னத்திரையில் ஹீரோவாக நடித்து வந்தவர் கவின். பின்னர், பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சிக்குள் எண்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் பெரிய நெகட்டிவ் விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டாலும் அவருக்கென ரசிகர்கள் கூட்டம் கூடியது.
அதிலும் தனக்கென ஒரு டீமை உருவாக்கிக்கொண்டு வெளியேறாமல் பார்த்து கொண்டார். ஒரு கட்டத்தில் அவருக்கு வெளியில் பல விமர்சனங்கள் இருந்தாலும் வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து பைனலை நெருங்கினார்.
ஆனால் இறுதியில் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அதன் பின்னர் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. லிப்ட் படம் சுமார் வெற்றியை பெற்றாலும் அதனை தொடர்ந்து வெளியான டாடா சூப்பர்ஹிட் வெற்றி படமாக அமைந்தது.
அதில் இருந்தே கவின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு இங்கிலீஷ் தலைப்புகளே வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்னும் ஹாய், மாஸ்க் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. இதில் ஹாய் படத்தில் நயனும், மாஸ்க் படத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.
ஏற்கனவே பர்ஸ்ட் லுக் ரிலீஸாக நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது தீபாவளி ஸ்பெஷலாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கவின் கூலாக உட்கார்ந்து டீ குடித்து கொண்டு இருக்க தொழிலதிபர் பூமி கைது என ஆண்ட்ரியா படம் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ5 ஆப் வாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. டாடா படத்துக்கு பின்னர் ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் என தொடர்ந்து கவினுக்கு படம் நஷ்டத்தில் சென்று கொண்டு இருக்கும் நிலையில் தற்போது மாஸ்க், ஹாய் காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.