எல்லாமே மிஸ் ஆகுது!.. வேறலெவலில் பல்பு வாங்கிய கீர்த்தி சுரேஷ்!.. வைரல் வீடியோ இதோ!..

by SARANYA |
எல்லாமே மிஸ் ஆகுது!.. வேறலெவலில் பல்பு வாங்கிய கீர்த்தி சுரேஷ்!.. வைரல் வீடியோ இதோ!..
X

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் அவர் தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். தற்போது கேட்ச் தி பாட்டில் சேலஞ்ச் விளையாடி ஒரு பாட்டில் கூட பிடிக்காமல் பல்பு வாங்கிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மலையாள திரைப்படங்களான பைலட்ஸ் , அச்சனே எனக்கு இஷ்டம், மற்றும் குபேரன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் 2013ஆம் ஆண்டு மலையாளப் படமான கீதாஞ்சலி மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் நடிக்கத் தொடங்கினார். மேலும், ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, சாமி 2, சண்டைக்கோழி 2, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


மூத்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை கதைத்தளமாக அமைத்து எடுக்கப்பட்ட மகாநடி படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்க மட்டுமல்ல வாழ்ந்தே காட்டியிருந்தார். இப்படத்திற்காக கீர்த்திக்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது கிடைத்தது. தமிழில் நடிகையர் திலகம் என ரிலீஸ் ஆகி இங்கேயும் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு அனைத்துமே வெற்றி படமாக அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு எமாற்றத்தில் முடிந்தது. அண்ணாத்த, சாணிக்காகிதம், சைரன், ரகு தாத்தா என அனைத்து படங்களும் தோல்வியை தழுவியது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் கன்னி வேடி, அக்கா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக தொடர்ந்து புகழ் பெற்று வருகிறார், மேலும் பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதிக்க முயற்சித்து பேபி ஜான் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கேட்ச் தி பாட்டில் சவாலில் ஒரு பாட்டில கூட பிடிக்க முடியாமல் மொக்க வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பட வாய்ப்புகள் தான் மிஸ் ஆகுதுன்னு பார்த்தா, பாட்டில் கூட மிஸ் ஆகுதே என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Next Story