ஹஸ்பண்டுக்கு லிப் கிஸ் செமயா அடிக்கிறாரே கீர்த்தி சுரேஷ்!.. போட்டோஸ் பாருங்க!...
Keerthy suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி வெஸ்டர்ன் லுக்கில் கெத்து காட்டிய ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனியை கோவாவில் பராம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.
நெருங்கிய வட்டாரங்கள் மட்டுமே கலந்துக்கொண்ட இத்திருமணத்தில் நடிகர் விஜயும் கலந்து கொண்டு இருந்தார். தங்களுடைய பெயர்களை இணைத்தே கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நாயிற்கு நைக் என பெயர் வைத்ததை தன்னுடைய கல்யாண அறிவிப்பில் சொல்லி இருந்தார். தொடர்ச்சியாக திருமண புகைப்படங்களும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி இரு மத முறைப்படி வெஸ்டர்ன் ஸ்டைலில் மீண்டும் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். இப்படங்கள் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கில் ஹிட்டடித்து வந்த கீர்த்தி சுரேஷ் இந்தியில் வருண் தவான் நடிப்பில் வெளி வர இருக்கும் பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார். இது தமிழில் வெளியாகி ஹிட்டடித்த தெறி படத்தின் ரீமேக். இப்படத்தினை அட்லி தயாரித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.