லாக் டவுனில் லிவிங் டூ கெதரில் இருந்தேன்... பரவிய வதந்திக்கு பல்ப் கொடுத்த கீர்த்தி சுரேஷ்
Keerthy suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 15 வருட காதலரை திருமணம் செய்துகொண்டு இருக்கும் நிலையில் சில முக்கிய விஷயங்களை உடைத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ச்சியாக தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான மகாநடி தேசிய விருதுகளை குவித்தது.
தமிழை தாண்டி தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பேபி ஜான் என்ற பாலிவுட் படமும் வெளியாகியது. இப்படத்தின் ரிலீசுக்கு முன்னரே தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனி தொட்டிலை கோவாவில் இரு மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளின் புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி லைக்ஸ் குவித்தது.
தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கணவர் குறித்து முதல்முறையாக பேசி இருக்கிறார். அதில், நான் 12ம் வகுப்பு படிக்கும் போது என்னை விட ஏழு வயது மூத்தவரான ஆண்டனி கத்தாரில் வேலை செய்து வந்தார்.
ஆறு வருடமாக லாங் டிஸ்டன்ஸ் உறவில் இருந்து வந்தோம். கொரோனா லாக்டவுன் சமயத்தில் நாங்கள் இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்தோம். ஆண்டனி என்னுடைய கேரியருக்கு நிறைய விஷயங்களில் துணையாக இருந்தார். அவருக்கு நான் லக்கி என்கிறார்கள். நான் தான் அவர் கிடைத்தது லக்கி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக கீர்த்தி சுரேஷ் லாக் டவுன் சமயத்தில் விஜயின் நண்பர் சஞ்சீவ் வீட்டில் இருந்ததாகவும், அவர் கார் பார்க் செய்யப்பட்ட புகைப்படத்தினை வெளியிட கூடாது என விஜய் தரப்பு மிரட்டியதாகவும் வதந்தி இருக்கும் நிலையில் இந்த தகவல் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.