முழுசா ஒரு வாரம் கூட முடியல!.. ஓவர் டெடிகேஷனோ?.. கழுத்தில் தாலியுடன் கீர்த்தி சுரேஷ்..!

by Ramya |
keerthi suresh
X

keerthi suresh

கீர்த்தி சுரேஷ்:

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கின்றார். தமிழில் இது என்ன மாயம் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு ரஜினிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், ரஜினி, விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார்.

இதையும் படிங்க: தம்பி மாட்டிக்கிட்டாரு.. தப்பிக்கிறதுக்கு இப்படி ஒரு உருட்டு!.. விக்கியை கலாய்த்த பிஸ்மி..!

தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து அங்கும் பிரபல நடிகையாக வலம் வந்தார். அதிலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட மகாநடி திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய காரணத்தால் இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

படவாய்ப்பு குறைவு:

குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் கிளாமர் குறைவாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் சற்று கவர்ச்சி காட்ட தொடங்கிய இவர் பாலிவுட்டில் தற்போது கால் பதித்திருக்கின்றார். அந்த வகையில் தமிழில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த தெறி திரைப்படத்தின் ரீமேக் ஹிந்தியில் பேபி ஜான் என்று எடுக்கப்பட்டது.



இந்த திரைப்படத்தில் நடிகர் வருண் தவானுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் படு கிளாமராக நடித்திருந்ததை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கீர்த்தி சுரேஷ் திருமணம்:

சமூக வலைதள பக்கங்களில் கீர்த்தி சுரேஷ் திருமணம் தொடர்பான செய்திகள் பரவி வந்தன. இது வதந்தியாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அவரே தனது திருமணம் குறித்து ஒப்புக்கொண்டார். தன்னுடைய 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் இந்து முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இவர்களின் திருமணத்திற்கு தென்னிந்திய சினிமாவை சேர்ந்த ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜய், திரிஷா, திவ்யதர்ஷினி, நடிகை கல்யாணி, நடிகர் சஞ்சீவ் ப்ரீத்தி குடும்பத்தினர் என பலரும் இவர்களின் திருமணத்திற்கு சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

பேபி ஜான் ப்ரோமோஷன்:

பேபி ஜான் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகள் பிஸியாக நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி தான் பாலிவுட்டில் தயாரித்து இருக்கின்றார். இந்நிலையில் இந்த புரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் கழுத்தில் மஞ்சள் தாலியுடன் வந்திருக்கின்றார்.


திருமணமாகி இன்னும் ஒரு வாரம் கூட முழுசாக முடிவடையாத நிலையில் கவர்ச்சியான உடையில் தாலியை அணிந்து கொண்டு அவர் வந்திருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஓவர் டெடிகேஷனா இருக்கே என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

Next Story