என் கணவருக்கு இதெல்லாம் ரொம்ப புதுசு.. கஷ்டமா இருக்கு!.. மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்..!
Keerthi Suresh: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது ஹிந்தி சினிமாவிலும் அறிமுகமாகி பேன் இந்தியா நடிகையாக மாறி இருக்கின்றார். தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபல நடிகையாக வளம் வந்த கீர்த்தி சுரேஷ் பின்னர் வாய்ப்பு குறைய ஹிந்தி சினிமா பக்கம் சென்று விட்டார். ஹிந்தியில் இவர் நடிப்பில் வெளிவந்த பேபி ஜான் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
தமிழில் அட்லீ இயக்கத்தில் உருவான தெறி திரைப்படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் தயாரித்திருந்தார் அட்லீ. இந்த திரைப்படம் கடந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியானது. படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. மேலும் இந்த திரைப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். இதற்கிடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 15 ஆண்டு காதலரான தொழிலதிபர் ஆண்டனி கட்டிலை கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் கோவாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது முதலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில் பின்னர் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு கணவர் குடும்பத்துடன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடினார் கீர்த்தி சுரேஷ். பின்னர் தன் குடும்பத்துடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
திருமணத்திற்கு பிறகு திருமண வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பது குறித்து சமீபத்தில் பேசி இருக்கின்றார் கீர்த்தி சுரேஷ். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'திருமணத்திற்கு பிறகும் பெரிதாக எதுவும் மாறியது போல் தோன்றவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கின்றது. நிறைய அட்டென்ஷன் கிடைக்கின்றது. ஆனால் இதெல்லாம் எனக்கு பழகிப்போன விஷயம் தான். ஆண்டனிக்கு இதில் பழக்கம் இல்லை. அவர் கொஞ்சம் கூச்சப்படுகின்றார்.
இருந்தாலும் எந்த புகாரும் சொல்வது கிடையாது. எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு வருகின்றார். ஆண்டனி எப்போதும் தனது கணக்கை பிரைவேட்டாக வைத்துக் கொள்பவர். தன் புகைப்படங்களை வெளியிடுவதில் அவருக்கு பெரிதாக விருப்பமில்லை. அது மட்டும் இல்லாமல் மீடியா முன்பு வருவதற்கும் அவர் கூச்சப்படுகின்றார்.
மீடியாவில் தன்னை குறித்தும் அவரைக் குறித்தும் எழுதும் பல விஷயங்கள் அவருக்கு சற்று கவலையை கொடுக்கின்றது. இதெல்லாம் எனக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் அவருக்கு ரொம்பவே புதுசு. அது அவருக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் எனக்காக பொறுத்துக் கொண்டிருக்கின்றார். மீடியா முன்பு வர கூச்சப்பட்டாலும் என்னுடைய கெ ரியருக்கு இது முக்கியம் என்பதை புரிந்து கொண்டு நடந்து வருகின்றார் ஆண்டனி என்று தனது கணவர் குறித்து பேசி இருக்கின்றார் கீர்த்தி சுரேஷ்.
இவர் ஆண்டனி தட்டிலை 15 வருடமாக காதலித்து வருகின்றார். ஆனால் சினிமாவில் அறிமுகமானதற்கு பிறகு தனது காதல் உறவை ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நெருக்கமான சிலரை தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியவே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.