பெரிய மனசுதான்பா நம்ம சமந்தாவுக்கு.. கீர்த்திக்காக எப்படி ஒரு வேலையை செஞ்சிருக்காங்க!..
நடிகை கீர்த்தி சுரேஷ்: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகி இருக்கின்றார். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார்.
தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து இருக்கின்றார் கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பின்னர் வாய்ப்பு குறைய கிளாமர் காட்ட தொடங்கிய கீர்த்தி சுரேஷ் பாலிவுட் அறிமுகமாகி இருக்கின்றார். இவர் முதலில் அஜய் தேவகனின் மைதான் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
ஆனால் அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்த காரணத்தால் அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரது கையை விட்டுபோனது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்தார் கீர்த்தி சுரேஷ். பின்னர் தமிழில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த தெறி திரைப்படத்தின் ரீமேக்கை அட்லீ பாலிவுட்டில் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த திரைப்படத்தில் நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த திரைப்படத்தில் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கின்றார். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. தமிழில் வெளியான தெறி திரைப்படத்தில் சமந்தா நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கின்றார்.
இந்நிலையில் அந்த கதாபாத்திரத்திற்கு தன்னை பரிந்துரை செய்தது சமந்தா தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கின்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருந்ததாவது கீர்த்தியால் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும். அவரை பேபி ஜான் திரைப்படத்தில் நடிக்க வையுங்கள் என்று சமந்தா தனிப்பட்ட முறையில் கூறியிருக்கின்றார்.
அதற்கு பிறகு தான் கீர்த்தி சுரேஷுக்கு அந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அந்த கதாபாத்திரம் தனக்கு கிடைக்க காரணமாக இருந்த சமந்தாவுக்கு நான் நன்றி கடன் பட்டிருப்பதாக அந்த பேட்டியில் அவர் தெரிவித்து இருக்கின்றார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் சமந்தாவுக்கு பெரிய மனசு தான் என்று புகழ்ந்து வருகிறார்கள். ஏனென்றால் தற்போது சமந்தா பாலிவுட்டில் நடித்து வருகின்றார்.
அவர் நினைத்திருந்தால் தெறி திரைப்படத்தின் ரீமேக்கிலும் நானே நடிக்கிறேன் என்று கூறி இருக்கலாம். ஆனால் அப்படி சொல்லாமல் கீர்த்தியின் பெயரை பரிந்துரை செய்திருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவை புகழ்ந்து பேசி வருகிறார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தான் தனது 15 வருட காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு அவரது நடிப்பில் ரிலீசான திரைப்படம் பேபி ஜான். இந்த திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக பல பேட்டிகளில் பெருமையாக பேசி வருகின்றார் கீர்த்தி சுரேஷ்.