என்னுடைய கஷ்டம்..காயங்கள்.. பரபரப்புக்கு மத்தியில் வைரலாகும் கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு

by ROHINI |
ravimohan
X

ravimohan

Ravimohan: ரவி மோகன் ஆர்த்தி விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்றது. இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ அது தொடர்பாக ரவிமோகன் ஆர்த்தி அவரது தாயார் என சோசியல் மீடியாக்களில் அறிக்கையை தொடர்ந்து பதிவிடுவதன் மூலம் சண்டை போட்டு வருகின்றனர். ரவிமோகனும் ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கிட்டத்தட்ட 16 வருடங்கள் இவர்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் திருமணத்திற்கு குஷ்பூவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. ஆர்த்தியின் அம்மாவும் குஷ்பூவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ரவிமோகனை ஆர்த்திக்கு அறிமுகம் செய்து வைத்ததே குஷ்பூதான் என சொல்லப்படுகிறது.

எந்தவொரு பிரச்னையும் இல்லாமல்தான் இவர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. திடீரென ஒரு பூகம்பம் கிளம்பி வாழ்க்கையில் விளையாடி வருகிறது. முதலில் விவாகரத்து வேண்டும் என ரவிமோகன் தான் அறிக்கையை கொடுத்தார். அதன் பிறகு இவர்களுக்கு இடையே என்ன பிரச்னை என ஆராய ஆரம்பித்தனர். அது சம்பந்தமாக பல விஷயங்கள் வெளியே வரத் தொடங்கியது.

ravimohan

ஆர்த்தியின் சந்தேகம்: ஆர்த்தி சந்தேகப்படுவதாகவும் அவரது தாயாருடன் சேர்ந்து டார்ச்சர் செய்வதாகவும் ரவி மோகன் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இந்தப் பக்கம் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் சேர்ந்து தன்னை வெறுத்துவருவதாகவும் கோவாவில் அவருடன் தான் தங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கேற்ப ஐசரி கணேஷ் இல்லத் திருமண விழாவில் ரவி மோகன் கெனிஷாவுடன் சேர்ந்து வந்தார்.

இது பல பேருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே ஆர்த்தி இரண்டு பக்க அறிக்கையை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதற்கு பதிலடியாக ரவி மோகன் நான்கு பக்க அறிக்கையை பதிவிட்டிருந்தார். அதன் பிறகு ஆர்த்தியின் தாயாரும் அவர் பங்குக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இப்படி ஆளாளுக்கு அறிக்கையை பதிவிட இன்று கெனிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு:சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. என் ஆன்மாவின் கஷ்டம் தனியாக நிற்கிறது. ஆனால் அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கிறது. இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன். ஆழ்ந்த சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது. நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது என அந்த பதிவில் பதிவிட்டிருக்கிறார் கெனிஷா.

Next Story