இனிமே யாராச்சும் பேசுவீங்க.. அவதூறு பரப்புபவர்கள் மீது நோட்டீஸ்.. அதிரடி காட்டிய கெனிஷா

by ROHINI |   ( Updated:2025-05-25 12:29:32  )
kenisha
X

kenisha

ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து பிரச்சினையில் தற்போது கெனிஷா அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நட்சத்திரமாக கருதப்படுபவர் நடிகர் ரவி மோகன். ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான ரவி மோகன் அந்தப் படத்திற்கு பிறகு தன் பெயரை ஜெயம் ரவி என்று மாற்றிக் கொண்டார். பின்னர் அந்த பெயருடனேயே இத்தனை ஆண்டுகாலம் டிராவல் செய்தார்.

அவரது நடிப்பில் கடைசியாக வெற்றி பெற்ற படம் பொன்னியின் செல்வன். அதுவும் மல்டிஸ்டார் படமாகத்தான் அது வெற்றியடைந்தது. சோலோ வெற்றி என இதுவரை ரவி மோகன் கொடுத்து பல ஆண்டுகளாகிவிட்டது. சமீபகாலமாக அவருக்கு எந்தப்படங்களும் வெற்றியடையவில்லை. இதற்கிடையில் கணவன் மனைவி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை விட்டு பிரிவதாக ரவி மோகன் அறிவித்தார்.

இது அவருடைய மனைவி ஆர்த்திக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலிருந்தே இரு தரப்பில் இருந்தும் அறிக்கை பறந்தவண்ணம் இருக்கின்றன. இதில் நீதிமன்றமும் இனிமே அறிக்கை மூலமாக யாரும் யாரையும் வசைபாடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் இடையில் இவ்ளோ பிரச்சினைக்கு காரணம் பாடகி கெனிஷாதான் என கெனிஷா மீது பல பேர் கமெண்ட்களை தெறிக்கவிட்டனர்.

அதுமட்டுமில்லாமல் கெனிஷா தன்னுடைய ஸ்டோரியில் பல பேர் தவறான வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதை பகிர்ந்திருக்கிறார். அதில் நீயெல்லாம் பொண்ணா? என்றெல்லாம் கடுமையாக திட்டி குறுஞ்செய்திகளை அனுப்பியிருக்கின்றனர். இந்த நிலையில் கெனிஷா திடீரென ஒரு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில் ரவிமோகன் விவகாரத்தில் தன்னை பற்றி அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பாலியல் வல்லுறவு மிரட்டல் மற்றும் ஆபாசமாக வசைபாடியவர்கள், கொலை மிரட்டல் விடுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்கு பல பேர் சரியான வழி என கெனிஷாவை பாராட்டியும் வருகிறார்கள்.

Next Story