இருக்குறவரைக்கும் ஜாலியா இருப்பேன்... என்னோட சோல்மேட் அவர்தான்... கெனிஷா 'பளிச்' தகவல்

ஜெயம் ரவி தற்போது கென்யா பாடகி கெனிஷாவுடன் தான் எங்கு போனாலும் சுற்றிக்கொண்டே இருக்கிறார். சமீபத்தில் ஐசரி கணேஷின் இல்லத்திருமணவிழாவில் ஜெயம் ரவி, கெனிஷாவுடன் பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதம் வந்து வேற லெவல் என்ட்ரி கொடுத்து பார்வையாளர்களைத் திணற வைத்தார். இது ஆர்த்திக்கும் ரொம்பவே கடுப்பைக் கிளப்ப அதிரடியாக அறிக்கை ஒன்றை விட்டார் என்பது ஊரறிந்த விஷயம்.
இதுதான் தற்போது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் அவரது அன்புக்குரியவள் கெனிஷா என்றும் வைத்துக் கொள்ளலாம். அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.
எல்லாருக்கும் ஒரு சோல்மெட் இருக்காங்க. மொத்தம் 7 பேரு இருப்பதா சொல்வாங்க. ஆனா ஒருத்தரையாவது பார்க்கணும்னு நினைக்கணும். முதல்ல ஒரு கேர்ள் ப்ரண்டு. அவள் கூட ரொம்ப வருஷமா க்ளோஸா இருக்கேன். நான் என்ன பண்ணாலும் அவங்களுக்கு கோபம் வராது. சிஸ்டர், ப்ரண்ட்ஸ்னு சொல்ல முடியாது.
அடுத்த சோல்மெட் வித்தியாசமான லைஃப்க்கு சொந்தக்காரர். நம்ம கண்ணைத் திறந்த ஒரு அன்பானவர். வெறுப்பு இல்லாதவர். அடுத்தவங்களை நோகடிக்கும் எண்ணங்கள் இல்லாதவர். அதனாலதான் அந்த உறவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார் கெனிஷா. நான் எப்போ மேல போவேன்னு எனக்கு தெரியல.
அதனால இருக்குற வரைக்கும் என்ஜாய் பண்ணிட்டு இருக்கலாமே. யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ய வேண்டாம் என்றும் கூலாக சிரித்தபடி சொல்கிறார் கெனிஷா. நீங்க சொல்லி நான் ஃபீலாகணும்னா நான் எப்படி வளருவேன். மென்டல் ஹெல்த்தைப் பொருத்தவரை நம்மோடதை நாம தான் பார்த்துக்கணும் என்று தத்துவம் பேசுகிறார்.
என்னோட ட்ரீமே ஆசிரமம் உருவாக்குவதுதான். அங்கு ஜட்ஜ்மென்ட், ஒப்பீனியன், எல்லாவற்றுக்கும் சுதந்திரம் உண்டு. துஷ்பிரயோகம், எதிர்மறை எண்ணங்கள் இருக்காது என்றும் சொல்கிறார் கெனிஷா.