பணம் கேட்டு ‘மாமன்’ பட ஹீரோயினை சுற்றி வளைத்த சிறுவர்கள்! நடிகை கொடுத்த ரியாக்‌ஷன்

by ROHINI |
aishwarya
X

aishwarya

இன்று சூரியின் நடிப்பில் மாமன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். சமீபகாலமாக சூரி ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பெற்று வர அந்த வகையில் மாமன் திரைப்படமும் மேலும் அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை இன்னும் ஒரு சில நாள்களில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு காமெடி நடிகராக இருந்து ஹீரோவாகியிருக்கிறார் சூரி. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி எப்படி நடித்தார் என பலரும் கேள்விகள எழுப்பினர். இதை பற்றி ஐஸ்வர்யா லட்சுமியே மேடையில் பதிலளித்தார். அவருடன் நடிப்பது என்னுடைய அதிர்ஷ்டம் என கூறினார் ஐஸ்வர்யா லட்சுமி.இவருக்கும் நடிகர் அர்ஜூன் தாஸுக்கும் இடையே காதல் இருப்பதாகவும் சர்ச்சைகள் கிளம்பின.

aishwarya

இருவரும் சேர்ந்து இருக்கும் மாதிரியான புகைப்படமும் வலைதளங்களில் வைரலாகி வந்தது. சினிமாவில் டாப் நடிகைகள் ரேஞ்சுக்கு ஒரு சில பேரை மட்டும்தான் வைத்து இந்த தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. ஆனால் உண்மையிலேயே நடிப்பு திறமை இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தாமல் தட்டிக் கழித்து விடுகிறது.

அப்படி ஒரு திறமையான நடிகைதான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடித்த படங்களை எடுத்துக் கொண்டால் அவருடைய கேரக்டர் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கும். கட்டா குஸ்தி படத்தில் யாருமே எதிர்பாராத ஒரு நடிப்பை வழங்கியிருப்பார் ஐஸ்வர்யா லட்சுமி. அதே போல் பொன்னியின் செல்வன் படத்திலும் குழலி என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார்.

இந்த நிலையில் இன்று மாமன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ஐஸ்வர்யா லட்சுமியை சிறுவர்கள் சூழ்ந்து கொண்டு பணம் கேட்டனர். அதற்கு ஐஸ்வர்யா லட்சுமி தன்னுடைய வெறுங்கையை காட்டி விட்டு கடந்து சென்றார். இது எல்லார் வாழ்க்கையிலும் நடப்பதுதான். ஆனால் இவர் செலிபிரிட்டி என்பதால் அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Next Story