Kingdom: சத்தமில்லாமல் ஓடிடிக்கு வந்த கிங்டம்… விநாயகர் சதுர்த்தியில் பிரச்னையையும் இழுத்துட்டு வந்துருக்காங்க!
Kingdom: விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கிங்டம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ஓடிடி வெளியீடு திடீரென நடந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
காதல் மன்னனாக கலக்கிய விஜய் தேவரகொண்டாவின் அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் படங்கள் மிகப்பெரிய வெற்றியை குவித்தது. இதனால் சினிமா உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றார் விஜய் தேவரகொண்டார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியானது கிங்டம்.
கௌதம் தின்னரி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவான திரைப்படம் ஓரளவு சுமார் வெற்றி என்று தான் கூற வேண்டும். விஜய் தேவரகொண்டாவுடன் சத்யதேவ், பாக்கியஸ்ரீபோஸ் நடித்து இருக்கின்றனர். வசூலிலும் அடிவாங்கியது கிங்டம் திரைப்படம்.
இந்நிலையில் இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ஒளிபரப்பாகும் இப்படம் ரசிகர்களிடம் தற்போது ஒரு சலசலப்பை ஏற்படுத்துகிறது. அதாவது இப்படத்தின் கதை ஆதிவாசி மக்கள் தங்களுடைய சொந்த மக்களையே கொல்கின்றனர்.
இதை தடுக்க உள்ளே வருகிறார் விஜய் தேவரகொண்டா. பிரச்னையே அந்த வில்லன் வேடத்தில் இருக்கும் மக்கள் சிங்கள மொழி பேசுவதுதான். தமிழ் ஈழ பிரச்னை பெரிய அளவில் தமிழ் மக்களை பாதித்த நிகழ்வு. இந்நிலையில் மோசமான மக்களுக்கு அந்த மொழியை கொடுப்பது பிரச்னையாக மாறி இருக்கிறது.
