ப்ளீஸ் அவருக்கு பாதுகாப்பு கொடுங்க!.. ராஷ்மிகா மந்தனாவுக்கு என்னாச்சி?!....

by Murugan |
rashmika mandana
X

Rashmika Mandana: கர்நாடகாவை சேந்தவர் ராஷ்மிகா. கர்நாடகாவில் கொடவா என்கிற பழங்குடி இனத்தை சேர்ந்தவர் இவர். துவக்கத்தில் கன்னட படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் ஒரு இடத்தை பிடித்த பின்னர் அவர் கன்னட சினிமா பக்கம் போகவில்லை. அதாவது கன்னட மொழி படங்களிலேயே அவர் நடிப்பதில்லை.

தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறிய ராஷ்மிகா அதன்பின் தமிழ், ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் பாலிவுட்டில் நல்ல வசூலை பெற்று வருவதால் அங்கு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் அனிமல் படத்தில் படுக்கையறை மற்றும் முத்தக்காட்சிகளில் நடித்து பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுத்தார்.

கடந்த வருடம் கன்னட திரைப்பட விழா பெங்களூரில் நடந்தபோது ராஷ்மிகாவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால், ‘என் வீடு ஹைதராபாத்தில் இருக்கிறது. பெங்களூர் எங்கிருக்கிறது என்றே எனக்கு தெரியாது’ என சொல்லி அவர் வர மறுத்துவிட்டதாக சொல்லப்பட்டது. இது சில கன்னட அமைப்புகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.


ராஷ்மிகாவுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா கனிகா கூறினார். மேலும், ‘ராஷ்மிகாவுக்கு எதாவது உதவி என்றால் என்னிடம்தான் வர வேண்டும். அப்போது நான் பார்த்துக்கொள்கிறேன்’ என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரும் சொன்னார். ஆனால், ராஷ்மிகா அப்படி சொல்லவே இல்லை என அவரின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொடவா சமூகத்தினர் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவை மிரட்டவில்லை என ரவிக்குமார் கவுடா சொல்லியிருக்கிறார். நான் பாடம் புகட்டுவேன் என சொன்னது வாழ்க்கை பாடத்தை. அவரை தாக்க வேண்டும் என அர்த்தம் கொள்ளக்கூடாது. அதேநேரம் ராஷ்மிகா தான் ஏறிய ஏணியை எட்டி உதைக்கக் கூடாது என சொல்லியிருக்கிறார்.

Next Story