அனிருத்தை ஓரம் கட்டும் வைரல் இசையமைப்பாளர்… தாங்குமா கோலிவுட்?

by Akhilan |   ( Updated:2025-03-02 07:26:35  )
Anirudh
X

Anirudh: தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த அனிருத் தன்னுடைய இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துருவது குறித்த அதிர்ச்சி தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

கோலிவுடில் ஒவ்வொரு காலமும் ஒரு இசையமைப்பாளர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருப்பார்கள். 70 களிலிருந்து 2000 வரை இசை அமைப்பாளர் இளையராஜா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வந்தார். அதை தன்னுடைய முதல் படமான ரோஜாவில் கைப்பிடித்தார் ஏ ஆர் ரகுமான்.

ஒரு கட்டத்தில் அவர் இசையமைப்பு செய்தாலே படம் சூப்பர் ஹிட் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்றளவும் இளையராஜாவிற்கு என இருக்கும் இடம் அப்படியேதான் இருக்கிறது. அதை தொடர்ந்து எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இவர்கள் இடங்களை பெரிய அளவில் இவர்களால் பிடிக்க முடியவில்லை.

ஆனால் தற்போது கோலிவுட் அனிருத் மயமாக மாறி இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் அனிருத் மட்டுமே இசையமைத்து வருகிறார். மற்ற இசையமைப்பாளர்கள் இசைக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் சோபிக்காமல் போகிறது.

அந்த அளவு அனிருத் தன்னுடைய ஆதிக்கத்தை கோலிவுட்டில் செலுத்தி வந்தார். தற்போதும் விஜயின் ஜனநாயகன், அஜித்தின் விடாமுயற்சி, ரஜினிகாந்தின் கூலி உள்ளிட்ட முன்னணி ஸ்டார்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

இதனால் இனி அனிருத் தான் என பேச்சு எழுந்து வந்தது. ஆனால் தற்போது ஆல்பம் இசையமைத்து வந்த சாய் அபியங்கர் இந்த இடத்திற்கு போட்டியாக வந்திருக்கிறார். இதுவரை மூன்று ஆல்பம் உங்களை உருவாக்கி இருக்கும் சாய் அபியங்கர் வைரல் இசையமைப்பாளராக மாறி இருக்கிறார்.

தற்போது அவருக்கு கோலிவுட் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கும், ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்துக்கு சாய் அபியங்கர் இசையமைக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story