Connect with us
kpy bala - kpy adhavan

Cinema News

பாலாவை நல்லவன்னு சொல்ல மாட்டேன்?.. குண்டை தூக்கி போட்ட KPY ஆதவன்

kpy பாலா :

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார் பாலா. தனது அசாத்திய பன்ச் கவுண்டர்களால் காமெடி செய்து ரசிகர்களை வயிரு குலுங்க சிரிக்க வைப்பார். பாலாவின் இந்த திறமையை கண்டறிந்த விஜய் டிவி தொடர்ந்து அனைத்து ரியாலிட்டி ஷோக்களிலும் வாய்ப்பு கொடுத்தது.

ஒரு கட்டத்தில் பாலா இல்லாத reality show விஜய் டிவியில் பார்க்க முடியாது. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மக்களுக்காக சேவை செய்து வந்தார்.

கர்ணன் பாலா :

வசதி இல்லாத ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, வயதில் பெரியோர்களுக்கு உதவுவது, மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு உதவுவது. மலைவாழ் பகுதி மக்களுக்காக ambulance வாங்கிக் கொடுப்பது. என பல நலத்திட்ட உதவிகளை தனி ஒரு அரசாங்கமாய் நின்று உதவிகளை செய்து வந்தார்.

அதன் பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் அறிமுகம் கிடைத்தது. இயக்குனர் செரிப் இயக்கத்தில் ’காந்தி கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்தில் sentiment emotional drama கதையில் நடித்து மக்களின் ஆழ் மனதில் தடம் பதித்து விட்டார்.

சர்வதேச கைக்கூலி :

தற்போது பாலா மீது இவர் சர்வதேச கைக்கூலி.. இவரால் தமிழ்நாட்டுக்கு பேர் ஆபத்து.. என்று சமூக வலைதளங்களில் இவரைப் பற்றி வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது மேலும் நாளுக்கு நாள் இது பேசும் பொருளாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அப்படி பாலா பற்றி உண்மையை கூறியிருக்கிறார் திரை பிரபலம் கே பி ஒய் ஆதவன்

மேலும் அவர் கூறுகையில்,” பாலா தொடர்ந்து நல்லது செய்து கொண்டு வருகிறார். ஆனால் அவர் மீது அவதூறு வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதற்கான proof இல்லை. அது வந்தால் தான் உண்மை வெளியே வரும். என்ன பொறுத்த வரை பாலா நல்ல பையன் தான்”.

பாலா பேசியது தவறு :

”அவர் வாங்கி கொடுத்த வண்டி எதுவும் புதுசு கிடையாது எல்லாமே used vehicle தான். அதன் மீது தற்போது புகார் வருகிறது. அதற்கான சரியான ஆவணங்கள் இருந்தால் பாலாவை கேட்டு தான் ஆகணும். மூத்த பத்திரிகையாளர் உமாபதிக்கு பதிலடி கொடுத்து பாலா ஒரு வீடியோவை வெளியிட்டார். அது ஒருமையில் பேசியது போல் இருந்தது பாலா அப்படி செய்திருக்கக் கூடாது. அவர் வயதில் பெரியவர்.
அது ரொம்ப தப்பு பாலா அப்படி பேசி இருக்க கூடாது. அதை தவிர்த்திருக்கலாம்”.

பாலாக்கு support செய்ய மாட்டேன் :

”அதுமட்டுமில்லை சமீபத்தில் ஏதோ press meet-ல் கூட பாலா தப்பா பேசிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அப்படி பண்ண கூடாது அது தப்பு. இளம் வயது என்றாலும் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். அவர் மீது தவறு இருக்கும் பட்சத்தில். பாலாவுக்கு நான் எப்போதும் support செய்ய மாட்டேன். ஒரு அண்ணனாக பாலா நீ நல்லவன் என்று சொல்ல மாட்டேன். அவனை அங்கே உட்கார வைத்து வைத்து விடுவேன். நாளைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கண்டிப்பாக எனக்கும் சில கமெண்ட்கள் வரும்”.

யார் அந்த channel :

”பாலா செய்யும் உதவிகள் அனைத்தும் அவர்களின் சொந்த விருப்பத்தின் பெயரில் தான் செய்கிறார். வேறு ஏதோ நோக்கம் இருக்குதா? என்பது அவருக்கு தான் தெரியும். பாலா உதவி செய்யும்போது இந்த மாதிரி வீடியோ எடுத்து தாருங்கள் என்று ஏதோ ஒரு channel சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் தான் தற்போது யார்? என்று தெரியவில்லை. அந்த சேனல் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்?. என்று கூறியுள்ளார்.

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top