1. Home
  2. Cinema News

KPY Bala: நான் சர்வதேச கைக்கூலியா? தொடர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த KPY பாலா!

KPY Bala: நான் சர்வதேச கைக்கூலியா? தொடர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த KPY பாலா!

KPY Bala: நடிகர் பாலா தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வரும் நிகழ்வு சமீபத்திய நாட்களாக சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் பேசியிருக்கும் தகவல் வைரல் ஆகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பாலா. தன்னுடைய காமெடிகளால் ரசிகர்களிடம் புகழ்பெற்றவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

 தொடர்ச்சியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தாலும் பாலாவின் அறிமுகம் பலருக்கு தெரிந்தது அவருடைய உதவிகளால்தான். பெட்ரோல் பங்கில் வேலை செய்த ஊழியருக்கு பைக் வாங்கி கொடுத்தது, முடியாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது என பாலா செய்த விஷயம் வைரலாகி கொண்டே இருந்தது.

தற்போது கூட பாலா ஒரு ஹாஸ்பிடலை கட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் காந்தி கண்ணாடி திரைப்படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலாவை சர்வதேச கைக்கூலி என பல விமர்சனம் செய்து வருகின்றனர்.

KPY Bala: நான் சர்வதேச கைக்கூலியா? தொடர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த KPY பாலா!
kpy bala

பாலா கொடுத்த ஆம்புலன்ஸ் நம்பரும் பொய்யாக இருப்பதாகவும் அவர் பித்தலாட்டம் செய்து வருவதாகவும் செய்தியாளர் ஒருவர் தொடர்ந்து பாலம் இது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது குறித்த பேட்டி ஒன்று வைரலான நிலையில் பலரின் பணத்தை தான் பாலா இப்படி உதவிகளாக செய்து விளம்பரம் தேடிக் கொள்வதாகவும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில் பாலாவை தொடர்ந்து பலரும் விமர்சிக்க தொடங்கி வருகின்றனர். இது குறித்து பதில் அளித்து இருக்கும் KPY பாலா ‘என்னை சர்வதேச கைக்கூலி என்று கூறுவது எனக்கே அதிர்ச்சியாக உள்ளது. நான் வண்டி வாங்கி தருகிறேன் என்றால் அதை அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள். அதற்காகத்தான் வண்டியின் நம்பரை மறைத்துக் கொடுக்கிறேன்.

நான் செய்த உதவிகளுக்கெல்லாம் ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் செய்த நிகழ்ச்சிகள், ப்ரோமோஷன், படங்களில் இருந்து வந்த வருமானத்தில் வைத்து தான் உதவிகள் செய்கிறேன். நான் கட்டி வருவது மருத்துவமனை அல்ல.. சின்ன கிளினிக் மட்டுமே. அதுவும் நான் நிலம் வாங்க வைத்திருந்தேன்’ என தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் பாலாவுடன் இருக்கும் பிரபலங்கள் உதவி செய்பவரின் குணத்தை பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அவரை இப்படி குறை சொல்வது அதிர்ச்சியாக இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.