1. Home
  2. Cinema News

நான் எடுத்த அந்த முடிவு என்னை இவ்வளவு அடிக்கும்னு எதிர்பார்க்கல.. kpy பாலா வேதனை

நான் எடுத்த அந்த முடிவு என்னை இவ்வளவு அடிக்கும்னு எதிர்பார்க்கல.. kpy பாலா வேதனை

kpy bala :

விஜய் டிவியில் அதிக டிஆர்பி கொண்ட கலக்கப்போவது யாரு காமெடி ஷோவின், சீசன் 6 டைட்டில் வின்னர் தான் பாலா. இவருக்கு ’பன்ச் பாலா’ என்ற பெயரும் இருக்கிறது. கவுண்டர் அட்டாக் செய்து காமெடி பன்ச்சால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.

விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் பாலாவை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அந்த அளவிற்கு பாலா தனது தனித்திறமையினால் உயர்ந்திருந்தார். தொடர்ந்து தன்னுடைய பாணியில் கலக்கிக் கொண்டிருந்த பாலாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே வெள்ளித்திரியிலும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தில்ஒரு காமெடியனாக தனது கிடைக்கப்பெற்ற வாய்ப்பை பயன்படுத்தினார்.

வெள்ளித்திரையில் ஹீரோ :

அதன் பிறகு தற்போது பாலா ’காந்தி கண்ணாடி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஒரு வழியாக பாலாவின் நீண்ட நாள் கனவான ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியது. பாலா ஆங்கரிங், டிவி நிகழ்ச்சி, வெளிநாடுகளில் ஷோ என்று தனக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளினால் வரும் பணத்தை தனக்கென்று செலவழிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு அள்ளிக் கொடுத்து கலியுக கர்ணனாக வலம் வருகிறார்.

கலியுக கர்ணன் :

இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்கள் கூட இப்படி அடுத்தவர்களுக்காக செலவு செய்ய மாட்டார்கள். ஆனால் பாலா ஓடி ஓடி தேடி தேடி சென்று உதவி செய்கிறார். இந்நிலையில் பாலா இவ்வளவு உதவிகளை செய்கிறாரே அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? யாரால் கொடுக்கப்பட்டது? இன்று பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லை பின்னாடி சர்வதேச சதிகாரர்களின் வேலை நடக்கிறது என்று சமீபத்தில் புரளி எழுந்தது.

பாலா வேதனை :

இந்த சம்பவம் பாலாவை மிகவும் கவலைக்கிடம் ஆக்கியது. இதைப் பற்றி பாலா கூறுகையில்,” நான் சம்பாதித்த பணத்தில் அடுக்குமாடி வீடு அல்லது ஆடம்பர கார் வாங்கி இருந்தால் கூட என்னை யாரும் கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். அந்த பணத்தில் சிறிய உதவியும் சிறிய கிளினிக் கட்ட முடிவெடுத்தேன். அதுதான் தற்போது இவ்வளவு பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது". என்று பாலா கவலையுடன் தெரிவித்தார்.

இந்த உலகத்தில் நல்லது செய்ய வேண்டுமென்றால் ஒருத்தரும் வர மாட்டார்கள் அல்லது அதை ஆச்சரியத்தோடு ஏதோ அதிசயம் போல் பார்ப்பார்கள். ஆனால் அதை தடுப்பதற்கு ஒரு கூட்டத்தோடு ஓடி வருவார்கள். தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான் அந்த கதை தான் தற்போது பாலாவுக்கு நடக்கிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.