மண்ணை கவ்விய NEEK… குபேரா ரிலீஸுக்கு தயாராகும் தனுஷ்… வெளியான சூப்பர் அப்டேட்

by Akhilan |
மண்ணை கவ்விய NEEK… குபேரா ரிலீஸுக்கு தயாராகும் தனுஷ்… வெளியான சூப்பர் அப்டேட்
X

Kubera: தனுஷின் நடிப்பில் குபேரா திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த ஆச்சரிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.

தனுஷ் தற்போது நடிப்பில் தொடர்ச்சியாக இட்லிகடை, குபேரா படங்களில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் தன்னுடைய டைரக்‌ஷன் பணிகளையும் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியிலும் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீஸானது. அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் கூட டிராகன் படத்தின் ரிலீஸால் படம் வசூலில் பெரிய அடி வாங்கி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது தனுஷின் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜூன் 20ந் தேதி இப்படத்தினை வெளியிட தேதியை குறித்து விட்டனர். இதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.

இப்படத்தின் மொத்த படப்பிடிப்புமே ஏற்கனவே முடிந்து விட்டது. டப்பிங் மற்றும் எடிட்டிங் வேலைகள் மட்டுமே தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் இந்த ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சேகர் கம்முலு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து தெலுங்கு சூப்பர் நடிகரான நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தனுஷ் இரண்டு வித கேரக்டரில் நடிக்கவும் வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விரைவில் வரிசையாக அப்டேட்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story