சினிமா எடுக்கப்போய் சின்னபின்னமான ஹீரோ!… குமார சம்பவம் டிரெய்லர் வீடியோ..
Kumaara Sambavam: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களால் பெரிதும் பார்க்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் குமரன் தங்கராஜன். மிகவும் பரிதாபமான முகத்தை வைத்துக்கொண்டு நடித்து பிரபலமானவர் இவர். சின்னத்திரை தொடர்களில் மட்டுமே நடித்து வந்த குமரன் தற்போது பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமார சம்பவம் என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் பாயல் ராதாகிருஷ்ணன், ஜிஎம் குமார், பால சரவணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அச்சு ராஜா மணி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை யாத்திசை எனும் திரைப்படத்தை தயாரித்த வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம், சிக்ஸ் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படம் வருகிற வருகிற 12-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோவான குமரன் குறும்படம் எடுப்பவராக இருந்து ஒரு சினிமா எடுக்கும் முயற்சியில் ஈடுபட அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
அவரின் தாத்தா சொன்ன கதையை சினிமாவாக எடுக்க முயற்சி செய்து அதில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை ஜாலியாகவும் உணர்வு பூர்வமாகவும் சொல்லி இருக்கிறார்கள். டிரெய்லரை பார்க்கும்போது கண்டிப்பாக இப்படம் ஹிட்டடிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
