விஜய் ரொம்ப புத்திசாலி.... அவர் எடுக்கற முடிவு நல்லா தான் இருக்கும்... வைரலாகும் குஷ்பூ வீடியோ

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:56  )

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி மாநாட்டையும் நடத்தி முடித்துள்ள விஜய்க்கு பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

முதல் மாநாட்டில் விஜய் எப்படிப் பேசப் போகிறார்? அவருக்கு தொடர்ந்து 10 வார்த்தைகள் கூட சேர்ந்தாற்போல பேசத்தெரியாதேன்னு சொன்னவங்களை எல்லாம் வாயடைக்க வைத்து விட்டார் விஜய். ஒரு சினிமாவே பார்த்தது மாதிரி இருந்தது. நிறைய விஷயங்களைப் பேசிருக்காருன்னு இன்னும் சிலர் சொன்னாங்க.

அப்படி இருக்கையில் இப்போது அவரைப் பற்றி குஷ்பு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கிய போது குஷ்பூ பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விஜயை மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார் குஷ்பூ.

இதுக்குப் பின்னாடி ஏதும் ஐஸ் வைக்கிற வேலை இருக்கான்னு நாம யோசிக்கும்போது அதே மாதிரியான கேள்வியை நிருபரும் கேட்டுள்ளார். அதற்கு குஷ்பூவும் பதில் சொல்கிறார். என்னன்னு பார்க்கலாமா...

குஷ்பூ விஜய் குறித்துப் பேசியது இதுதான். 'அவர் நண்பர் அல்ல. எனக்குத் தம்பி. ரொம்ப புத்திசாலி. அவருக்கு அட்வைஸ் தேவையில்லை. அவர் எடுக்கற முடிவு நல்லா தான் இருக்கும். அரசியலுக்கு வந்துருக்காரு. வரட்டும். யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம். அவருக்கு என்னோட வாழ்த்துக்கள்' என்ற குஷ்புவிடம் நிருபர் மேலும் கேள்விகளை முன் வைத்தார்.

'தம்பியைக் கூட்டணிக்கு அழைக்கிறீங்களா'ன்னு? நிருபர் கேட்டதுக்கு 'நிச்சயமா கிடையாது. மேலிடத்துல முடிவு பண்ணுவாங்க' என்றார். 'கட்சி சார்பா சொல்லும்போது தனிப்பட்ட விருப்பம் எல்லாம் சொல்ல முடியாது. அதை மேலிடம் பார்த்துக் கொள்ளும்'. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது எதற்கு வைரலாகிறது என்பது தான் தெரியவில்லை.

2010ல் திமுகவிலும், 2014ல் காங்கிரஸ் கட்சியிலும் இருந்த அவர் தற்போது பிஜேபியில் உள்ளார். அதனால் அடுத்து எங்கு போக இருக்கிறார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை விஜயை என் தம்பி. அவர் ரொம்ப புத்திசாலி. அவருக்கு அட்வைஸே தேவையில்லை. அவர் எடுக்குற முடிவு நல்லா தான் இருக்கும்னு சொன்னதால தவெகவுக்குத் தாவக் கூட வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Next Story