நாள் கணக்கில் தூங்கிய விஷால்... குஷ்பூ என்ன சொன்னார்? இனியாவது நிரந்தரமா மாறுவாரா?
மதகஜராஜா தான் பொங்கல் வின்னர்னு சொல்றாங்க. சந்தானம் காமெடியைப் பார்க்கறதுக்காகவே தியேட்டருக்கு மக்கள் வர்றாங்கன்னு சொல்றாங்க. இதுபற்றி பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.
அபூர்வமான காமெடி: நண்பர் சொன்னாரு. 12 வருஷத்துக்கு முன்னாடி வந்த படம். அன்னைக்கு வந்துருந்தா இது பிளாப் ஆகிருக்கும். ஏன்னா இந்த மாதிரி 100 படங்கள் அப்போ வந்தது. ஆனா இன்னைக்கு காமெடி அபூர்வமா ஆகிடுச்சு.
சூரி காமெடி பண்ணல: யோகிபாபு காமெடியை நம்பி தமிழ்சினிமா இருக்குற அளவுக்கு ஒரு துர்பாக்கிய நிலையில தமிழ்சினிமா இருக்கு. அவரை நம்பி ரசிகர்களும் இருக்காங்க. இப்போ காமெடிக்கு மிகப்பெரிய வறட்சி வந்துவிட்டது. சூரி காமெடியனாக இருந்தாலும் அவர் காமெடி பண்ணலங்கறது வேற விஷயம். அவர் ஆங்கிலத்தைத் தவறாக உச்சரிப்பதையே நகைச்சுவைன்னு நினைச்சிக்கிட்டு இருந்தாரு.
சந்தானத்துக்குப் பிறகு யோகிபாபு, சூரி இருந்தாலும் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்கு. இப்படிப்பட்ட சூழலில் சந்தானம் பட்டையைக் கிளப்பிக்கிட்டு இருக்காரு. அப்படிப்பட்ட சூழலில் இப்படி ஒரு படம் வந்ததால எல்லாருக்கும் ஒரு பிடித்தமான படமாக இருக்குன்னுதான் நான் நினைக்கிறேன்.
குளிர் ஜூரம்: விஷாலுக்கு கை நடுங்கியது எல்லாமே நாடகம்தானா என்று கேட்டதற்கு தொகுப்பாளர் சொன்ன மாதிரி அவருக்கு குளிர் ஜூரம் என்பதில் உண்மையில்லை. அவரது நண்பர்களும் அவருடைய உடல்நலம் தேறி வர பல முயற்சிகளைள செய்தனர். தொடர்ந்து அவரது உடல்நலம் தேறி வருகிறது. இதே மதகஜராஜா விழாவில்தான் விஷாலின் பெயரும் கெட்டுப்போனது.
சாதகமாக்கிய விஷால்: சமூக ஊடகங்கள் அதை வேறு மாதிரியாகக் கொண்டு போனாங்க. அது இரக்கத்தை ஏற்படுத்தும்னு பார்த்தால் அது வேறு மாதிரியாகச் சென்றது. அதனால் அதே படவிழாவைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் விஷால். அவரது உடல்நிலையை இன்னும் சில நாள்கள் கழித்துத் தான் பார்க்க முடியும். பட புரொமோஷனுக்காகவும் விஷாலுக்கு கை நடுங்கவில்லை. அவரைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார்.
குஷ்பூ: அதற்கு என்ன காரணம்னா அவர் வீட்டுலயே கவுந்தடிச்சிப் படுத்துடுவார். நாம மணிக்கணக்குல தூங்குவோம். அவர் நாள் கணக்கில் தூங்குவார். அதற்கு அவர் சொன்ன காரணமே வேறு. ஆனால் திரையுலகில் சொல்ற காரணம் வேறு. குஷ்பூவே ஒரு முறை சொன்னாங்க.
'உன்னைக் காண்டக்ட் பண்ணவே முடியல'ன்னு ஒருமையில் சொல்வாங்க. ஆனால் இன்றைக்கு விஷால் கொஞ்சம் மாறி இருக்கிறார். அவருடைய இந்த மாற்றம் நிரந்தரமா நீடிக்குமா இல்லையாங்கறதுதான் கேள்வி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.