இங்க என்ன சொல்லுது... தளபதி 69-ல் படத்தில் இவரா...? என்னென்ன செய்ய காத்திருக்காங்களோ...!

by ramya |
இங்க என்ன சொல்லுது... தளபதி 69-ல் படத்தில் இவரா...? என்னென்ன செய்ய காத்திருக்காங்களோ...!
X

vijay

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் திடீரென்று அரசியலில் களம் இறங்கி இருக்கின்றார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனது கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்த விஜய் சமீபத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொடி என அனைத்தையும் அறிவித்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த இருக்கின்றார். இதை காண ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இப்படி அரசியல் வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய் கடைசியாக தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.

இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இந்த நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படம் என்பதால் நடிகர் விஜய் வைத்து தயாரிக்க முன்வந்திருக்கின்றது. இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு கிட்டத்தட்ட 250 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது.

மேலும் இயக்குனர் ஹச் வினோத் இப்படத்தை இயக்குகின்றார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். கடந்த 3 நாட்களாக இப்படத்தின் காஸ்டிங் தொடர்பான தகவல் வந்து கொண்டிருக்கிறது. முதலாவதாக அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்த பாபி தியோல் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். பின்னர் நேற்று மாலை பிரேமலு என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்த இளம் நடிகை மம்தா பைஜூ இந்த திரைப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியானது. இவர் இந்த திரைப்படத்தின் மூலமாக நேரடியாக தமிழில் அறிமுகமாக இருக்கின்றார்.

இதை அனைத்தையும் ரசிகர்கள் ஏற்கனவே கணித்திருந்தார்கள். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு புதிய அறிவிப்பு கேவிஎன் நிறுவனம் சார்பாக வெளியாகி இருக்கின்றது. அதாவது தளபதியை 69ஆவது திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ்மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருக்கின்றது.

நடிகர் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் கௌதம் வாசுதேவ் மேனன். தற்போது அவருடன் சேர்ந்து நடிக்க இருக்கின்றார் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 ஆவது திரைப்படத்தை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக எடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.



Next Story