வந்துட்டாங்கப்பா மினி மகாராணி... தளபதி 69இல் மற்றொரு நாயகி... யாருன்னு பாருங்க...!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். அதே சமயத்தில் தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வளம் வருபவர். இவர் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகர் விஜய் உடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. சுமார் 25 நாட்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த இந்த திரைப்படம் 425 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்ததாக நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறியிருக்கின்றார். இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே தனது கட்சியின் பெயரை அறிவித்திருந்த விஜய் சமீபத்தில் கட்சி தொடர்பான கொடியையும் அறிமுகம் செய்தார். வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடும் நடைபெற இருக்கின்றது.

இப்படி அரசியலில் ஒரு பக்கம் பிஸியாக இருக்கும் நடிகர் விஜயின் தளபதி 69 ஆவது திரைப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட் வந்து கொண்டிருக்கின்றது. அதன்படி தளபதி 69 திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது. இயக்குனர் ஹெச் வினோத் இந்த திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இதைத்தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கின்றார். கேவிஎன் புரொடக்ஷன் தமிழில் தயாரிக்கும் முதல் திரைப்படம் என்பதால் நடிகர் விஜய் வைத்து தயாரிப்பதற்கு முடிவு செய்துள்ளனர்.

அதன்படி நேற்று முதலே படத்தின் கேஸ்டிங் தொடர்பான அப்டேட் வந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இப்படத்தில் அனிமல் படத்தில் நடித்திருந்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இன்று காலை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி பிரேமலு என்ற திரைப்படத்தில் நடித்து மிகப் பெரிய வரவேற்பை பெற்ற மம்தா பைஜூ இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.



ramya
ramya  
Related Articles
Next Story
Share it