1. Home
  2. Cinema News

கவனம் ஈர்த்த லஷ்மிகாந்தன் கொலை வழக்கு டைட்டில் லுக் போஸ்டர்

lakshmi ganthan kolai vazhakku

நேற்று வெளியான லஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


லஷ்மிகாந்தன் கொலை வழக்கு என்பது தமிழகத்தையே உலுக்குய ஒரு வழக்காகும்.  லட்சுமி காந்தன் இந்து நேசன் என்ற பத்திரிக்கையை நடத்தி வந்தார். அதில் திரையுலகை சேர்ந்தவகளின் அந்தரங்க விசயங்களை செய்திகளாக்கி வந்தார். இந்த நிலையில் தியாகராஜ பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் குறித்தும் அதில் எழுதியுள்ளார். இதனால் கோபமடைந்த இருவரும் கூலிப்படைகளை கொண்டு லட்சுமி காந்தனை கொலை செய்த சம்பவத்தில் அப்போதைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.  கிருஷ்ணனும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கு தியாகராஜ பாகவதரின் திரையுலக வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இருவரும் ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பின் மேல்முறையீடு செய்து விடுதலை பெற்றும்வெளியில் வந்தனர்.  ஆனால் அதற்கு பின் தியாகராஜ பாகவதரால் சினிமா உலகில் பிரகாசிக்க முடியவில்லை. தொடர் தோல்வி மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தின் அடிப்படையில் 2m சினிமாஸ் நிறுவனம் சார்பில், K.V.சபரீஷ் தயாரிக்கும் படம்தான் லஷ்மி காந்தன் கொலை வழக்கு.  

lakshmi ganthan kolai vazhakku

கொன்றால் பாவம் மற்றும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் போன்ற படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரிவில் வெளியிடுவோம் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று   லஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. அது தற்போது ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.

கட்டுரையாளர்கள்