Thuglife: இந்த ரெண்டு பேருல நீ யார் கூடம்மா போக போற? தெறிக்க விட்ட தக் மீம்ஸ்!

by SANKARAN |   ( Updated:2025-06-07 06:28:51  )
Thuglife: இந்த ரெண்டு பேருல நீ யார் கூடம்மா போக போற? தெறிக்க விட்ட தக் மீம்ஸ்!
X

மணிரத்னம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கமல், சிம்பு நடித்த தக் லைஃப் இரு தினங்களுக்கு முன் வெளியானது. படத்திற்கு பாசிடிவாக விமர்சனங்கள் வரும் என்று பார்த்தால் நெகடிவ் தான் நிறைய வருகின்றன.

கமல் கதை எழுதிய இந்தப் படத்தை மணிரத்னம் சற்று மாறுதல் செய்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். கமல் உடன் சிம்பு முதன்முறையாக இணைந்துள்ளார். படத்தின் முதல் பாதி மெதுவாகவும் 2ம் பாதி விறுவிறுப்பாகவும் செல்வதாக முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் சொன்னார்கள்.

ஆனால் சினிமா விமர்சகர்கள் புளூசட்டைமாறன் உள்பட பலர் படத்தைக் கிழித்துத் தொங்க விட்டுள்ளனர். மாமனாரின் இன்பவெறி, அஞ்சறைக்குள்ள வண்டி மாதிரி இது கேங்ஸ்டர் படமா, பிட்டுப்படமா என கேள்வி எழுப்பி உள்ளனர். சினிமா விமர்சகர் சங்கர் இந்தப் படத்தில் கேங்ஸ்டர் என்ன வேலை செய்றாங்கன்னே தெரியல.

அப்பனும், மகனும் திரிஷாவுக்காக அடிச்சிக்கிறாங்க. ஏன் இந்த வக்ரபுத்தின்னு காரசாரமாக விமர்சித்துள்ளார். ரொம்ப எதிர்பார்ப்போடு பார்க்க போகாதீங்க. கமலை மட்டுமே நம்பி மணிரத்னம் படம் எடுத்துள்ளார். அவர் அவுட் டேட் ஆகி விட்டார். சிம்பு கமலுக்கு எவ்வளவோ தேவல என்றெல்லாம் நெகடிவ் ரிவியூஸ் வருகிறது.


வசூலிலும் இந்தியன் 2, ரெட்ரோ படங்களை விட குறைவாகவே உள்ளது. இந்திய அளவில் முதல் நாள் வசூல் வெறும் 17 கோடி தான். படத்தில் ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் சூப்பர். என்றாலும் ஜிங்குச்சா தவிர எல்லா பாடல்களும் அரைகுறையாகத் தான் காட்டப்படுகின்றன. இந்தப் படத்திற்கு இப்போது ஒரு மீம்ஸ் போட்டுள்ளார்கள். டிவியில் லட்சுமி ராமகிருஷ்ணன் காதல், கல்யாணம் மற்றும் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் வகையில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இதில் அவர் கட்டப்பஞ்சாயத்தே பண்ணுவார். பிரச்சனைக்குள்ளான நபர்கள் அவர் கேட்கும் கேள்வியில் வெலவெலத்துப் போவார்கள். அந்த வகையில் தக் லைஃப் கமல், சிம்புவிடம் திரிஷாவை முன்வைத்து ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். 'இந்த ரெண்டு பேருல நீ யார் கூடம்மா போகப் போற'ன்னு அந்த மீம்ஸ் இப்போது வைரலாகி வருகிறது.

Next Story